சிவாஜியை சிலை போல உட்கார வைத்த பாடல்: மேஜிக் செய்த கண்ணதாசன்- எம்.எஸ்.வி- டி.எம்.எஸ் கூட்டணி
பொதுவாக சிவாஜி தனது படங்களின் பாடல் காட்சிகள் ஆட்டம் போடுவதும், நடிப்புக்கு ஏற்ற காட்சிகளில் அசத்தியமாக நடித்து அனைவரையும் திகைப்பில் ஆழத்தக்கூடிய ஒருவர்
தமிழ் சினிமாவில் நடிப்புக்கு பெயர் பெற்ற நடிகர் திலகம் சிவாஜி கணேசளை ஒரு பாடல் முழுவதும் நடக்க வைத்தே பாடமாக்கி அந்த பாடலும் பெரிய ஹிட் பாடலாக அமைந்தது பலரும் அறியாத ஒரு தகவல்.
Advertisment
1964-ம் ஆண்டு தாதா மிராசி இயக்கத்தில் வெளியான படம் புதிய பறவை. சிவாஜி கணேசன், சவுகார் ஜானகி, சரோஜா தேவி, எம்.ஆர்,ராதா ஆகியோர் நடித்த இந்த படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் ராமமூர்த்தி இருவரும் இணைந்து இசையமைக்க, அனைத்து பாடல்களையும் கவியரசர் கண்ணதாசன் எழுதியிருந்தார். படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
குறிப்பாக எங்கே நிம்மதி என்ற பாடல், கவலையின் விரக்தியில் இருக்கும் ஒருவன் அடுத்து என்ன செய்ய வேண்டும் எந்த திசையில் நகர வேண்டும் என்று தெரியாமல் விழித்துக்கொண்டு இருக்கும்போது பாடும் பாடல். இந்த பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கண்ணதாசன் எழுதிய இந்த பாடலை டி.எம்.சௌந்திரராஜன் தனக்கே உரிய குரலில் சிறப்பாக பாடி அசத்தியிருந்தார்.
பொதுவாக சிவாஜி தனது படங்களின் பாடல் காட்சிகள் ஆட்டம் போடுவதும், நடிப்புக்கு ஏற்ற காட்சிகளில் அசத்தியமாக நடித்து அனைவரையும் திகைப்பில் ஆழத்தக்கூடிய ஒருவர். அதனால் தான் நடிகர் திலகம் என்று அழைக்கப்பட்டுள்ளார். அதே சமயம் சில பாடல் காட்சிகளில் சோகத்தின் மையம் என்பதால், நடக்க வைத்தோ அல்லது கைகால்களை அசைக்க வைத்தோ படமாக்கி இருப்பார்கள்.
ஆனால் புதுவிதமாக எங்கே நிம்மதி என்ற பாடலில் சிவாஜி கணேசன் முகபானைகளால் அசத்திருப்பார். இந்த பாடல் இன்றும் நல்ல வரவேற்பை பெற்றுதற்கு முக்கிய காரணம் எம்.எஸ்.வி – கண்ணதாசன் என்றாலும், சிவாஜியின் வித்தியாசமான நடிப்பும் இந்த பாடலுக்கு பெரிய வரவேற்பாக அமைந்தது.
நடிக்க வேண்டும் என்று வந்த டி.எம்.எஸ். பாடகராகவும், அதே நடிப்புக்காக கவந்த எம்.எஸ்.வி இசையமைப்பளராகவும், சினிமாவில் வசனம் எழுத வேண்டும் என்று வந்த கண்ணதாசன் கவிஞராகவும் மாறி தங்களது துறைகளில் அசைக்க முடியாத ஆளுமைகளை வளர்த்துக்கொண்டனர். அதேபோல் இந்த பாடலில் சிவாஜியின் நடிப்புக்கு தகுந்தார்போல் டி.எம்.எஸ் தனது குரலில் வித்தியாசம் காட்டியிருப்பார்.
இறுதியாக இந்த பாடலை கேட்ட சிவாஜி கணேசன் வெகுநேரம் அசையாமல் அதே இடத்தில் அமர்ந்து மெய் மறந்து கேட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“