கவியரசர் கண்ணதாசன் – மெல்லிசை மன்னர் எம்எஸ்.விஸ்வநாதன் இருவரும் தங்கள் பிரபலம் இல்லாத காலக்கட்டத்தில் கேட்ட பாடல்களை வைத்து இதே போன்ற ஒரு பாடலை தான் முன்னணியில் இருக்கும்போது ஒருவாக்க வேண்டும் என்று யோசித்துள்ளனர். அப்படி உருவான ஒரு பாடல் இன்றும் போற்றப்படும் ஒரு பாடலாக உள்ளது.
Advertisment
க்ளாசிக் தமிழ் சினிமாவில், மெல்லிசை மன்னனாக திகழ்ந்தவர் தான் எம்.எஸ்.விஸ்வநாதன். சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் மட்டுமல்லாமல், அப்போதைய அறிமுக நடிகர்களாக வந்த பலருக்கும் தனது இசையின் மூலம் வெற்றிகளை கொடுத்துள்ள எம்.எஸ்.வி, டி.கே ராமமூர்த்தியுடன் இணைந்து பல படங்களுக்கு இசையமைத்துள்ளா.
அதேபோல் கவியரசர் கண்ணதாசனுடன் எம்.எஸ்.வி இணைந்த பல படங்கள் ரசிகர்களின் மனதிற்கு இனிமையான பாடல்களை கொடுத்துள்ளது. அந்த வகையில் பாவ மன்னிப்பு படத்தில் இடம்பெற்ற வந்த நாள் முதல் என்ற பாடலுக்கு ஒரு பெரிய வரலாறு உள்ளது பலரும் அறியாத ஒரு தகவல்கள். 1953-ம் ஆண்டு கவியரசர் கண்ணதாசன் பிரபலமில்லாத காலக்கட்டத்தில், மாடர்ன் தியேட்டர்சில் பணியாற்றியுள்ளார்.
அப்போது அங்கு ஒரு இந்தி படத்தின் ஷூட்டிங் நடந்தபோது அந்த படத்தின் கவிஞரிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த படத்தில் வாழ்க்கையில் பல துன்பங்களை சந்தித்த ஒருவர் பாடும் பாடல் என்று அந்த இந்தி கவிஞர் ஒரு பாடலை சொல்ல, அதற்கான அர்த்தம் ‘’கடவுளே இந்த உடலகத்தை படைத்தாய் ஆனால் ஒருநாள் இங்கு வந்து தங்கிப்பார்’’ என்று இந்தியில் எழுதியதாக கண்ணதாசனுக்கு அர்த்தம் கொடுக்கப்பட்டது.
Advertisment
Advertisement
இந்த பாடலை கேட்ட கண்ணதாசன், இந்த சுட்சிலேஷனுக்கு நாம் பாடல் எழுத வேண்டும் என்று யோசித்துள்ளார். அதேபோல் இசை உதவியாளராக இருந்த எம்.எஸ்.விஸ்வநாதன், ஒருநாள் அதிகாலை கடற்கரையில் சென்று கொண்டிருந்தபோது, மீனவர்கள் பாடும் ஒரு பாடலை கேட்டுள்ளார். இந்த பாடல் அவருக்கு பிடித்து போக, இதே மாதிரி ஒரு பாடலை நாம் இசையமைப்பாளராக ஆனவுடன் உருவாக்க வேண்டும் என்று யோசித்துள்ளார்.
பின்னாளில் கண்ணதாசன் கவிஞராகவும், எம்.எஸ்.வி இசையமைப்பாளராகவும் உருவாகிவிட்ட நிலையில், 1961-ம் ஆண்டு பீம்சிங் இயக்கத்தில் பாவ மன்னிப்பு படம் உருவாகியுள்ளது. இந்துவாக பிறந்து முஸ்லீமாக மாறிய சிவாஜி ஒரு கிறிஸ்டீன் பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொள்வார். அவர் தனது வாழ்க்கையை நினைத்து பாடும் பாடல் என்று இயக்குனர் சொல்ல, கண்ணதாசன் இந்த பாடலை எழுதியுள்ளார்.
இயக்குனர் இதை சொன்ன உடனே, எம்.எஸ்.விக்கு அந்த கடற்கரை பாடல் நினைவுக்கு வந்து அதேபோன்று ஒரு டியூனை ஒருவாக்கியுள்ளார். இருவேறு லெஜண்ட்கள் தங்கள் வாழ்க்கையில் சந்தித்த அனுவத்தை பயன்படுத்தி ஒரு பெரிய ஹிட் பாடலாக உருக்கியது தான் ‘’வந்த நாள் முதல் இந்த நாள் வரை’’ என்ற பாடல். இன்றும் இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.