இந்திய சினிமாவின் முன்னணி பாடகியாக இருந்த லதா மங்கேஷ்கர் சென்னை வந்தபோது, எம்.எஸ்.வி பாடலை கேட்டு மயங்கி எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டுள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
தமிழ் சினிமாவில், தனது பாடல்கள் மற்றும் இசையின் மூலம் மெல்லிசை மன்னர் என்று பெயரேடுத்த எம்.எஸ்.விஸ்வநாதன், எம்.ஜி.ஆர், சிவாஜி, உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருக்கும் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். அதேபோல் கவியரசர் கண்ணதாசனுடன் இணைந்து இன்றுவரை போற்றப்படும் பல அரிய பாடல்களை கொடுத்துள்ள எம்.எஸ்.வி, தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இசையமைப்பாரளாக இன்றுவரை போற்றப்படுகிறார்.
இவரது பாடல் மற்றும் இசையமைக்கும் பாணி உள்ளிட்ட பணிகளை பார்த்து பலரும் இவரிடம் பாடல் பாட வேண்டும் என்று விரும்பியுள்ளனர். அந்த வகையில் எம்.எஸ்.வி இசையில் பாடல் பாட வேண்டும் என்று விரும்பியவர் தான் பிரபல பாடலி லதா மங்கேஷ்கர். 1961-ம் ஆண்டு பீம்சிங் இயக்கத்தில் வெளியான படம் பாவ மன்னிப்பு. சந்திரபாபு கதை மற்றும் திரைக்கதை எழுதி, பீம்சிங் இயக்கத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
சிவாஜி கணேசன், தேவிகா, ஜெமினி கணேசன், சாவித்ரி ஆகியோர் நடித்திருந்த இந்த படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்தி இசையமைக்க, கவியரசர் கண்ணதாசன் அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளார். இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், ‘’அத்தான் என்னத்தான்’’ என்ற பாடல் இன்றுவரை போற்றப்படும் ஒரு பாடலாக நிலைத்திருக்கிறது.
இந்த பாடல் கம்போசிங்கின்போது, ஒரு இந்தி பாடல் பாடுவதற்காக சென்னை வந்திருந்த பிரபல பாடகியான லதா மங்கேஷ்கர், இந்த பாடலை கேட்டுள்ளார். இந்த பாடலால் ஈர்க்கப்பட்ட அவர், இது என்ன பாட்டு, உங்க படம் தானா என்று கேட்க, ஏ.வி.எம்.நிறுவனத்தினர், ஆமாம் எங்க படம் தான் வாங்க பார்ப்போம் என்று சொல்லி அழைத்து சென்றுள்ளனர். உள்ளே சென்று பார்த்தபோது எம்.எஸ்.வி கம்போசிங் செய்ய, பி.சுசீலா இந்த பாடலை பாடிக்கொண்டு இருந்துள்ளார்.
பாடல் கம்போசிங் முடிந்தவுடன், எம்.எஸ்.வியிடம் சென்ற லதா மங்கேஷ்கர், நான் தான் லதா மங்கஷ்கர் என்று சொல்ல, அய்யோ அம்மா உங்களை உலகத்திற்கே தெரியுமே நீங்க என்ட அறிமுகம் செய்றீங்க என்று கேட்க, இந்த மாதிரி பாடல் இருந்தால் என்னை கூப்பிடுங்க. நான் மும்பையில் இருந்து வந்து பாடுகிறேன். இந்த பாடலை எத்தனை நான் கம்போசிங் பண்ணீங்க என்று கேட்க, நேற்று கம்போசிங் செய்தோம் இன்று ரொக்கார்டிங் என்று எம்.எஸ்.வி கூறியுள்ளார்.
இதை கேட்ட லதா மங்கேஷ்கர் இந்தியில் இப்படி ஒரு பாடல் உருவாக 10 நாட்கள் ஆகும். ஆனால் நீங்கள் ஒரு நாள் கம்போசிங் செய்து மறுநாள் ரெக்கார்டிங் வைத்திருக்கிறீர்கள் என்று பாராட்டிவிட்டு, தன்னை பாடல் பாட அழைக்குமாறு கூறிவிட்டு சென்றுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.