செல்லக்கிளியே மெல்லப்பேசு... ஒரே பாடலில் 2 ஜாலங்கள் : எம்.எஸ்.வி செய்த மேஜிக்
எம்.ஜி.ஆர் சரோஜா தேவி, எம்.ஆர்.ராதா, சௌகார் ஜானகி என பலரும் நடித்திருந்த இந்த படம் 1921-ம் ஆண்டு அமெரிக்காவில் வெளியான தி கிட் என்ற படத்தின் திரைக்கதையை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது.
க்ளாசிக் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக திகழ்ந்த எம்.எஸ்.விஸ்வநாதன், தனது இசையால் பல வெற்றிகளை குவித்திருந்தாலும், பல பாடல்களில் தனது இசை ஜாலத்தை கொடுத்து வித்தியாசம் காட்டியிருப்பார். அந்த வகையில், எம்.ஜி.ஆர் நடித்த பெற்றால் தான் பிள்ளையா என்ற படத்தின் ஒரு பாடலில் மகிழ்ச்சியும் சோகமும் ஒரே பாடலில் இடம் பெற்றது போன்ற ஒரு உணர்வை கொடுத்திருப்பார்.
Advertisment
1966-ம் ஆண்டு கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் வெளியான படம் பெற்றால் தான் பின்னையா? எம்.ஜி.ஆர் சரோஜா தேவி, எம்.ஆர்.ராதா, சௌகார் ஜானகி என பலரும் நடித்திருந்த இந்த படம் 1921-ம் ஆண்டு அமெரிக்காவில் வெளியான தி கிட் என்ற படத்தின் திரைக்கதையை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது. இந்த படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்க, வாலி அனைத்து பாடல்களையும் எழுதியிருந்தார்.
இந்த படத்தின் கதையையை எழுதிய எழுத்தாளர் ஆரூர் தாஸ், முதலில் சிவாஜியிடம் இந்த கதையை கூறியுள்ளார். அவருக்கு இந்த கதை மிகவும் பிடித்துபோக, உடனடியாக ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால், சில தவிர்க்க முடியாக காரணங்களால் இந்த கதை அவரிடம் இருந்து எம்.ஜி.ஆருக்கு போக அவரும் உடனடியாக ஒப்புக்கொண்டு படத்தில் நடிக்க தொடங்கிவிட்டார். நாடோடியாக இருக்கும் எம்.ஜி.ஆருக்கு ஒரு குழந்தை கிடைக்கிறது. அந்த குழந்தையை வளர்க்க அவர் எடுக்கும் முயற்சிகள் தான் கதை.
இந்த படத்தில், அந்த குழந்தைக்கு தாலாட்டு பாடும் வகையில் ஒரு பாடல் இடம் பெற்றுள்ளது. செல்லக்கிளியே என்று தொடங்கும் இந்த பாடலை டி.எம்.சௌந்திரராஜன் எழுதியிருப்பார். ஆரம்பத்தில் மகிழ்ச்சியான இசையில் தொடங்கும் இந்த பாடல், இறுதியில் சோகத்தில் முடிவது போல் இசையமைத்திருப்பார் எம்.எஸ்.வி. அதேபோல் குழந்தைக்கு தாய் தான் தாலாட்டு பாடுவார் என்பதை தாண்டி, ஒரு ஆண் குழந்தைக்கு தாலாட்டு பாடுகிறார் என்ற புதுமையும் இந்த பாடலில் உள்ளது.
குழந்தைகளிடம் விளையாட்டு காட்டுவதற்காக பயன்படுத்தப்படும் பீப்பி உள்ளிட்ட இசைக்கருவிகளை பயன்படுத்தி இசையமைத்திருப்பார் எம்.எஸ்.வி. அதேபோல் முதலில் உற்சாகத்தின் வெளிப்பாடாக தொடங்கும் இந்த பாடல் அப்படியே சரிந்து சோகத்தின் மோடில் செல்லும். இந்த பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“