தமிழ் சினிமாவில் மெல்லிசை மன்னர்கள் என்று போற்றப்படும் இசையமைப்பாளர்கள் எம்.ஸ்.விஸ்வநாதன் – டி.கே.ராமமூர்த்தி. தங்களது குருநாதர் எஸ்.எம் சுப்பையா நாயுடு திடீர் மரணம் காரணமாக அவர் விட்டுச்சென்ற படங்களுக்கு இவரும் இணைந்து இசையமைத்தனர். அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கும் இசையமைத்து பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளனர்.
நடிகர் திலகம் சிவாஜி கவியரசர் கண்ணதாசன் இருவரின் மூலமும் மெல்லிசை மன்னர்கள் என்று பட்டம் பெற்ற இவர்கள் இருவரும் ஒரு கட்டத்தில் பிரிந்தனர். எம்.எஸ்.வி சொந்தமாக ஒரு படத்தை தயாரித்து நஷ்டமடைந்ததால், அந்த கடனில் தன்னை சேர்க்க வேண்டாம் என்று டி.கே.ராமமூர்ததி கேட்டுக்கொண்டதை தொடர்ந்து இவரும் பிரிந்து இசையமைத்தனர்.
1952- தொடங்கி 1965 வரை சுமார் 13 வருடங்கள் தமிழ் சினிமாவில் தங்களது இசையால் பல வெற்றிப்படங்களை கொடுத்த இந்த கூடடணி 1965-ம் ஆண்டு பிரிந்தது. 1965-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் படம் தான் இவர்கள் இருவரும் அப்போதைக காலக்கட்டத்தில் இணைந்து இசையமைத்த கடைசி படமாகும். அதனைத் தொடர்ந்து, 30 வருடங்கள் கழித்து சத்யராஜ் நடிப்பில் கடந்த 1995-ம் ஆண்டு வெளியான எங்கிருந்தோ வந்தான் என்ற படத்திற்கு இசையமைத்திருந்தனர்.
பல படங்களுக்கு தனது மெல்லிசையின் மூலம் வெற்றிகளை கொடுத்த எம்.எஸ்.விஸ்வநாதன் கடந்த 1995-ம் ஆண்டு கல்கி என்ற நாடத்தின் மூலம் தனது நடிப்பு பயணத்தை தொடங்கினார். நடிக்க வேண்டும் என்று சினிமாவுக்கு வந்த எம்.எஸ்.வி இசையமைப்பாளராக கொடிகட்டி பறந்தார். அதன்பிறகு நடிப்பிலும் அசத்தினார். இதில் கடந்த 1998-ம் ஆண்டு வெளியான காதல் மன்னன் படத்தில் மெஸ் விஸ்வநாதன் என்ற கேரக்டரில் கண்ணதாசனின் தீவிர ரசிகராக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று அப்படத்தின் இயக்குனரும் நடிகர் விவேக்கும் எம்.எஸ்.வியிடம் பேசியபோது அவர் படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனால் அவரை விடாத நடிகர் விவேக் நீங்கள் கட்டாயம் நடித்தேதான் ஆக வேண்டும் என்று வற்புறுத்தியதால் நடிக்க ஒப்புக்கொண்ட எம்.எஸ்.விஸ்வநாதன் தனக்கு சம்பளமாக 10 லட்சம் வேண்டும் என்று கேட்டுள்ளார். இதற்கு இயக்குனர் சரணும் சம்மதம் கூறியுள்ளார். அப்போது எம்.எஸ்.வி எனக்கு 5 லட்சம் ராமமூர்த்திக்கு 5 லட்சம். எம்.எஸ்.விஸ்வநாதன் – ராமமூர்த்தி என்பது ஒரு ப்ராண்ட் எங்களை பிரிக்காதீங்க என்று எம்.எஸ்.வி கேட்டுக்கொண்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.