Advertisment

இந்த பாட்டு நாகேஷ்க்கா? கண்டிப்பா தேறாது : டி.எம்.எஸ் கணிப்பை பொய்யாக்கிய நாகேஷ்

ஏ.வி.எம் நிறுவனம் 1964-ம் ஆண்டு காமெடி நடிகராக இருந்த நாகேஷை நாயகனாகவும், அப்போது நாயகனாக இருந்த முத்துராமனை துணை நடிகராகவும் வைத்து சர்வர் சுந்தரம் என்ற படத்தை தொடங்கியது.

author-image
WebDesk
New Update
Nagesh TMS

நாகேஷ் - டி.எம்.எஸ்

நடிகர் நாகேஷ் நாயகனாக நடித்த சர்வர் சுந்தரம் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், இந்த படத்தில் ஒரு பாடல் பாடிய பாடகர் டி.எம்.எஸ். இந்த பாடல் கண்டிப்பாக வெற்றி பெறாது என்று கூறியதும், அதற்கு நேர்மாறாக இப்போதுவரை அந்த பாடல் வரவேற்பை பெற்று வருவருதும் யாரும் அறிந்திடாத ஒரு தகவல்.

Advertisment

புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் ஏ.வி.எம் நிறுவனம் 1964-ம் ஆண்டு புதிதாக ஒரு முயற்சி எடுத்தது. காமெடி நடிகராக இருந்த நாகேஷை நாயகனாகவும், அப்போது நாயகனாக இருந்த முத்துராமனை துணை நடிகராகவும் வைத்து சர்வர் சுந்தரம் என்ற படத்தை தொடங்கியது. கிருஷ்ணன் பஞ்சு இயக்கிய இந்த படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்திருந்தார்.

மேலும் இந்த படத்தில் சினிமா ஷூட்டிங் எப்படி நடக்கும், சினிமாவில் பாடல் ரெக்கார்டிங் உள்ளிட்ட பல வேலைகள் எப்படி நடக்கும் என்பதை அப்படியே காட்டியிருப்பார்கள். இந்த படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. குறிப்பாக வாலி எழுதிய அவளுக்கென்ன அழகிய முகம் என்ற பாடல் இன்றும் ஒரு சிறப்பான வரவேற்பை பெற்று வரும் ஒரு பாடலான நிலைத்திருக்கிறது.

இந்த பாடலை எழுத கவிஞர் வாலி அழைக்கப்பட்டபோது, அவர் மதுபோதையில் இருந்ததாகவும், அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல், ஏ.வி.எம்.நிறுவனத்திற்கு வந்து பாடல் எழுதி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. அதேபோல் இந்த பாடலை பாட வந்த டி.எம்.ஸ் பாடலை பாடி முடித்துவிட்டு, இந்த பாடல் யாருக்காக படத்தில் வருகிறது என்று கேட்டுள்ளார். நாகேஷ் நாயகனாக இருந்தாலும், இந்த படத்தில் முத்துராமன் – கே.ஆர்.விஜயா ஜோடியா நடித்திருந்தனர்.

இதனிடையே அவளுக்கென்ன அழகிய முகம் பாடல், என்ற பாடல் நாகேஷ் நடிக்கும் பாடல் என்று கூறியுள்ளனர். இதை கேட்ட டி.எம்.எஸ், சிரித்துவிட்டு, இவ்வளவு முயற்சி பண்ணி பாட வச்சீங்களே, இதை ஒரு காமெடியன் பாடினால் யாராவது கேட்பார்களா? நல்லா பாருங்க படத்தில் இந்த பாடல் வரும்போது அனைவரும் டீ குடிக்கவோ அல்லது வேறு எதுக்கவோ வெளியே சென்றுவிடுவார்கள் என்ன இப்படி பண்ணிட்டீங்களே என்று சொல்லிவிட்டு சென்றுள்ளார்.

இதை கேட்ட ஏ.வி.எம் நிறுவனத்தினர், இப்படி சொல்லிட்டாரே சரி இருக்கட்டும், இவரையே வியக்க வைப்பது போல் நாம் செய்ய வேண்டும் என்று யோசித்து, இந்த பாடல் எடுத்தஉடனே இசையமைப்புடன் தொடங்குவது போன்று, பாடல் பதிவு நடைபெறும் காட்சிகள் இடம்பெற்றிருக்கும் இதற்கு தியேட்டர்களில் அவ்வளவு வரவேற்பு கிடைத்துள்ளது என்று பேராசிரியர் ஞானசம்பந்தம் தனது வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

T M soundararajan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment