திருவள்ளுவர் எழுதிய 1330 திருக்குறளை விட இந்த ஒரு பாடல் அதை விட பெரியது என்று ஒரு பாடலை என்.எஸ்.கிருஷ்ணன் வியந்து பாராட்டியதாக கவிஞர் வாலி ஒரு பாடலை குறிப்பிட்டுள்ளார். அது என்ன பாடல்? எந்த படத்தில் இடம் பெற்றது தெரியுமா?
Advertisment
தமிழ் க்ளாகிச் சினிமாவில் நடிகர் பாடகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முக திறமை கொண்டவர் என்.எஸ்.கிருஷ்ணன். எம்.ஜி.ஆர் தனது குருவாக ஏற்றுக்கொண்ட இவர் சினிமாவில் அனைவரிடமும் அன்புடன் பழகும் மனம் கொண்டவர். சினிமாவில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்த்து வைப்பதில் முக்கியத்துவம் வாய்ந்தவராக இருந்த என்.எஸ்.கிருஷ்ணன், ஒருவரை பாராட்ட வேண்டும் என்றால் அவரது வீட்டுக்கே சென்று பாராட்டிவிட்டு வருவராம்.
அந்த அளவிற்கு இளகிய மனம் கொண்ட என்.எஸ்.கே, திருவள்ளுவர் எழுதிய 1330 திருக்குறளும் இந்த ஒரு பாடலும் சமமான கருத்துக்களை கொண்டது என்று ஒரு பாடலை சுட்டிக்காட்டியுள்ளார் க்ளாசிக் சினிமாவில் நல்ல கருத்துக்களை வெளிப்படையாக பாடலில் வைத்த கவிஞர்களில் முக்கியமானவர் தஞ்சை ராமையா தாஸ். பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ள இவரை பற்றி இன்றைய தலைமுறை ரசிகர்கள் அதிகமாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
அதே சமயம் அவர் எழுதிய பாடல்கள் இன்றைய நடைமுறையை அன்றே கணித்ததுபோல் வரிகளை அமைத்திருப்பார். அப்படி ஒரு பாடல் சிங்காரி படத்தில் இடம்பெற்றுள்ளது. 1951-ம் ஆண்டு டி.ஆர்.ராகுநாத் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில், டி.ஆர்.ராமச்சந்திரன், லலிதா, பத்மினி ஆகியோர் இணைந்து நடித்திருந்தனர். எஸ்.வி.வெங்கட்ராமன், டி.ஆர்.ராமநாதன், டி.ஏ.கல்யாணம் ஆகியோர் இணைந்து இசையமைத்த இந்த படத்திற்கு, கண்ணதாசன் கே.பி.காமாட்சி சுந்தரம் ஆகியோர் 2 பாடல்கள் எழுத மற்ற பாடல்களை தஞ்சை ராமையா தாஸ் எழுதியுள்ளார்.
இந்த படத்திற்கு இடம்பெற்ற ‘’ஒருஜான் வயிறு இல்லாட்டா’’ என்ற பாடல் இன்றைய உலகின் நிலையையும், மனிதனின் வாழ்க்கையும் சரியாக கணித்து எழுதப்பட்ட ஒரு பாடலாக உள்ளது. இந்த பாடலைத்தான் என்.எஸ்.கிருஷ்ணன் திருக்குறளுடன் ஒப்பிட்டு கூறியுள்ளார் என்று கூறியுள்ள கவிஞர் வாலி, 2-ம் உலகப்போர் சமயத்தில் வந்த பெரும் அரிசி பஞ்சத்தை வைத்து இந்த பாடலை எழுதியிருப்பார். இதுதான் வாழ்க்கை என்று என்.எஸ்.கிருஷ்ணன் கூறியதாக குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“