மழை பெய்ததால் நாடகம் நடத்த முடியாததால் இன்று தங்களது பிழைப்பு போய்விட்டதே என்று நடிகர்கள் சோகத்தில் இருந்தபோது அவர்களை உற்சாகப்படுத்த கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார் எழுதிய ஒரு பாடல் பெரிய ஹிட்டத்த நிலையில், பின்னாளில் அந்த பாடல் படத்திலும் சேர்க்கப்பட்டது.
Advertisment
சமூக சீர்த்திருத்த பாடல்களை எழுதுவதில் வல்லவராக இருந்த பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார், மக்கள் கவிஞர் என்று அழைக்கப்படும் இவர், தான் எழுதிய அனைத்து பாடல்களிலும் சமூக சீர் திருத்தம், மக்கள் முன்னேற்றம் பற்றி கருத்துக்களுடன் எழுதியவர். ஆனால் அவர் தனது கொள்கையில் இருந்து விலகி ஒரே ஒரு பாடலை மட்டும் எழுதியுள்ளார்.
சினிமாவுக்கு வருவதற்கு முன்பு, பல தொழில்களை செய்து வந்த பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் நாடகங்களிலும் நடித்து வந்துள்ளார். அப்போது ஒருநாள், டி.கே.பாலச்சந்தர் நாடகத்தில் நடிப்பதற்காக அந்த குழுவினருடன், ஸ்ரீவில்லிப்புத்தூருக்கு சென்றுள்ளார். இவர்கள் அங்கு சென்றபோது, பலத்த மழை பெய்துள்ளது. இதனால் நாடகம் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனை நினைத்த நாடக நடிகர்கள் இன்னைக்கு நம்ம பிழைப்பு போய்டுச்சே என்று சோகத்தில் இருந்துள்ளனர். மேலும் ஒவ்வொருவருக்கும் குறைந்த அளவு பணம் கொடுத்து, இன்னொரு நாள் நாடகம் நடத்தலாம். அனைவரும் சென்றுவாருங்கள் என்று நாடக குழுவினரை வழியனுப்பி வைத்துள்ளனர். இதனால் அனைவரும் சோகத்துடன் பஸ்ஸில் ஏறியுள்ளனர்.
Advertisment
Advertisements
அடுத்த நாள் அருப்புக்கோட்டைக்கு செல்ல வேண்டும் என்பதால், சோகத்துடன் பேருந்தில் சென்றவர்களை பார்த்துக்கொண்டே அவர்களுடன் சென்ற பட்டுக்கோட்டை, மழை பெய்தால் இந்த மக்களுக்கு நல்லது தானே இதற்காக ஏன் இப்படி சோகமாக இருக்கிறார்கள்? இவர்களை குஷிப்படுத்த வேண்டும் என்பதால், பஸ்ஸில் தாளம் போட தொடங்கியுள்ளார். இந்த சத்தம் கேட்டு அனைவரும் திரும்பி பார்க்கின்றனர்.
இதனை கண்ட பட்டுக்கோட்டை, ‘’சின்னக்குட்டி நாத்தினா, சில்லறையை மாத்துனா’’ என்ற பாடலை பாட, மற்ற கலைஞர்களும் இவருடன் பாட தொடங்குகின்றனர். இதனால் பஸ்ஸே உற்சாகமாக இருக்க, டிரைவர் பஸ்ஸை நிறுத்திவிட்டு பாடலுக்கு நடனமாடி உற்சாகமாக இருந்துள்ளனர்.
பின்னாளில் இந்த பாடல், மாட்ர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம் தயாரிப்பில் வந்த ஆரவல்லி என்ற படத்தில் இடம் பெற்றிருந்தது. பட்டுக்கோட்டை சமூக கருத்து இல்லாமல் எழுதிய ஒரே பாடல் இதுதான். இந்த பாடல் இன்றும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. திருச்சி லோகநாதன் இந்த பாடலை பாடியிருப்பார்.