கவிஞனுக்கே உரிய தன்மானம்; எம்.ஜி.ஆரையே இறங்கி வர வைத்த மருதகாசி
1920-ம் ஆண்டு பிப்ரவரி 13-ந் தேதி பிறந்த மருதகாசி 1955-ம் ஆண்டு வெளியான மங்கையர் திகலம் என்ற படத்தின் மூலம் பாடல் ஆசியராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.
1920-ம் ஆண்டு பிப்ரவரி 13-ந் தேதி பிறந்த மருதகாசி 1955-ம் ஆண்டு வெளியான மங்கையர் திகலம் என்ற படத்தின் மூலம் பாடல் ஆசியராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.
க்ளாசிக் சினிமாவில் முடிசூடா மன்னாக திகழ்ந்தவர் எம்.ஜி.ஆர். நாடக நடிகராக இருந்து பின்னாளில் பல தடைகளை கடந்து நாயகமாக மாறிய அவர், ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவை தனது கைக்குள் வைத்திருந்தார் என்று சொல்லலாம். அதேபோல் தனது படங்களில் தனக்கு தெரியாமல் எந்த செயலும் நடக்காது என்று சொல்லும் அளவுக்கு இருந்த எம்.ஜி.ஆர் ஒரு விஷயம் வேண்டாம் என்றால் அதை யாரும் செய்யமாட்டார்கள்.
Advertisment
அதேபோல் மற்றவர்கள் பெரிதாக ஆர்வம் காட்டாமல் எம்.ஜி.ஆருக்கு பிடித்திருந்தாலும் அதை ஏற்றுக்கொள்வார்கள். அப்படி இருந்தபோது கவிஞர் ஒருவரிடம் பாடல் வரிகளை மாற்றுமாறு சொல்லியும் எம்.ஜி.ஆர் பேச்சை கேட்காத அவர் தைரியாக மாற்ற முடியாது என்று கூறியதை தொடர்ந்து அந்த பாடல் அப்படியே பயன்படுத்தப்பட்டுள்ளது. அவர் தான் கவிஞர் மருதகாசி.
1920-ம் ஆண்டு பிப்ரவரி 13-ந் தேதி பிறந்த மருதகாசி 1955-ம் ஆண்டு வெளியான மங்கையர் திகலம் என்ற படத்தின் மூலம் பாடல் ஆசியராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் தனது வரிகளின் மூலம் ஹிட் பாடல்களை கொடுத்துள்ள மருதகாசி, எம்.ஜி.ஆர் நடிப்பில், அலிபாபாவும் 40 திருடர்களும், மன்னாதி மன்னன், தாய்க்கு பின் தாரம் என ஒரு சில படங்களில் பாடல்களை எழுதியுள்ளார்.
இதில் 1956-ம் ஆண்டு வெளியான தாய்க்கு பின் தாரம் என்ற படத்தில் மனுஷன மனுஷன் சாப்பிடுராண்டா தப்பி பயலே என்ற ஒரு பாடலை மட்டும் எழுதியிருந்தார். இந்த பாடலை கேட்ட எம்.ஜி.ஆர் என்ன இது தம்பி பயலே அதுவே இதுவே ன்று இருக்கிறது. கவிஞரு பாட்டை மாற்றி கொடுங்களேன் என்று கூறியுள்ளார். இதற்கு மருதகாசி ஏன் என்று கேட்டபோது அருமை தம்பி சின்னத்தம்பி அப்படி ஏதாவது போடுங்கள். பயலே என்பது வேண்டாம் என்று கூறியுள்ளார்.
Advertisment
Advertisements
இதை கேட்ட மருதகாசி, கவிஞருக்கே உரிய தன்மானத்துடன் மாற்ற முடியாது என்று கூறியுள்ளார். ஏன் என்று கேட்டபோது, இது கிராமிய பாடல். கிராமத்தில் தம்பி பயலே சின்ன பயலே என்பது புழக்கத்தில் இருக்கு வார்த்தைகள். அதனால் இதை மாற்ற முடியாது என்று கூறியள்ளார். இதை கேட்ட எம்.ஜி.ஆர் கோபத்தில் போய்விட, அவரது அண்ணன் சக்கரபாணி இந்த பாடலை கேட்டுவிட்டு என்ன பிரச்சனை என்று விசாரித்துள்ளார்.
அப்போது வரிகளை மாற்ற சொன்னது குறித்து கேள்விப்பட்ட அவர், எம்.ஜி.ஆரிடம் சென்று, பொதுவா கிராமத்து வழக்கத்தில் தம்பி பயலே என்பது அதிகம் பயன்படுத்தும் வார்த்தை. நீ சொல்வது போல் மாற்றினால் கிராமின மணத்திற்கு நல்லா இருக்காது என்று கூறியள்ளார். அதன்பிறகு எம்.ஜி.ஆர் ஒப்புக்கொண்டதால் பாடல் பதிவு செய்யப்பட்டு படத்தில் இணைக்கப்பட்டது.
சினிமாவின் உச்சத்தில் இருந்த எம்.ஜி.ஆரே வரிகளை மாற்ற சொன்னாலும் கவிஞனுக்கே உரிய தன்மானத்துடன் மாற்றாமல் இந்த பாடலை அப்படியே வெளி கொண்டு வந்த கவிஞர் மருதகாசி, 1989-ம் ஆண்டு நவம்பர் 29-ந் தேதி மரணமடைந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“