தமிழில் கிளாசிக் சினிமா தொடங்கி டிஜிட்டல் சினிமா வைர பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளவர் கவிஞர் வாலி. எம்.ஜி.ஆர் சிவாஜி தொடங்கி ரஜினி, கமல், விஜய் அஜித் சிம்பு சூர்யா உள்ளிட்ட இன்றைய தலைமுறை நடிகர்களுக்கும் தனது கவித்துவமான பாடல்களை கொடுத்து வெற்றியை பெற்ற வாலி கடைசி வரை வாலிப கவிஞர் என்ற பட்டத்துடன் இருந்தார்.
சினிமாவில் சாதித்த நடிகர்கள் கவிஞர்கள் என பலரும் தங்களுக்கு முதல் வாய்ப்பு கிடைப்பதற்க முன் பல அவமானங்களையும், அவமதிப்புகளைளும் கஷ்டங்களையும் சந்தித்து தான் இந்த நிலைக்கு வந்திருக்கிறார்கள். இதில் கவிஞர் வாலியும் விதிவிலக்கல்ல. தனது பாடல்களில் மூலம் பல வெற்றிகளை குவித்திருந்தாலும், சினிமா வாய்ப்பு கிடைப்பதற்கு முன் அவர் பல கஷ்டங்களை அனுபவித்துள்ளார்.
வாலியை எப்படியாவது கவிஞர் ஆக்கிவிட் வேண்டும் என்று விரும்பிய நடிகர் வி.கோபால கிருஷ்ணன், சினிமாவில் பலருடன் நட்பு வட்டாரத்தை வளர்த்துக்கொண்டிருந்தார். இந்த நட்பு வட்டாரத்தின் அடிப்படையில் இசையமைப்பாளர் ஜி.வெங்கடேஷ் உள்ளிட்ட பலரிடம், வாலியை அழைத்து சென்று, அறிமுகப்படுத்தியுள்ளார். அந்த இசையமைப்பாளர்கள் அனைவருமே வாலி மற்றும் கோபால கிருஷ்ணன் ஆகிய இருவருக்கும் வரவேற்பை கொடுத்த அளவிற்கு வாலிக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை.
ஆனாலும் மனம் தளராத கோபாலகிருஷ்ணன் நாளை உன்னை வேறொரு இசையமைப்பாளரிடம் அழைத்து செல்கிறேன். அவர் எனக்கு மிகவும் வேண்டப்பட்டவர் நிச்சயமாக இவரிடம் உனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கூறிவிட்டு அந்த இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் என்று கூறியுள்ளார். இதை கேட்டு மகிழ்ச்சியடைந்த வாலி தான் யாருடைய இசையில் பாடல் எழுத வேண்டும் என்று நினைத்தேனோ அவருடனே முதல் அறிமுகம் என்று நினைத்து மகிழ்ந்துள்ளார்.
அதன்பிறகு இருவரும் எம்.எஸ்.வி வீட்டுக்கு போனபோது கோபாலகிருஷ்ணனை எம்.எஸ்.வி கட்டியனைத்து வரவேற்றார். தொடர்ந்து வாலியை யார் என்று சைகையில் கேட்க, வாலி தனது பாடல் புத்தகத்தை எம்.எஸ்.வியிடம் கொடுக்கிறார். அதை வாங்கிய எம்.எஸ்.வி ஆழ்ந்து படித்துள்ளார். படித்து முடித்துவிட்டு என்ன சொல்ல போகிறாரோ என்ற வாலி நினைத்துக்கொண்டிருக்க எம்.எஸ்.வி தனது வேலையாளை அழைத்து அனைவருக்கும் காபி கொடுக்க சொல்கிறார்.
அதன்பிறகு கோபாலகிருஷ்ணனை தனியாக அழைத்து எம்.எஸ்.வி, வாலியின் பாடல்களை படித்ததில் அவர் சினிமாவில் புகழ் பெறும் வாய்ப்பு குறைவு, ரொம்ப படித்தவர் என்ற சொல்றீங்க கௌம்பி திருச்சிக்கு போய் ஒரு நல்ல உத்தியோகத்தில் சேர சொல்லுங்க என்று கூறியுள்ளார். இதை கேட்ட கோபாலகிருஷ்ணன், வாலியை அழைத்துக்கொண்டு கிளம்புகிறார். வரும் வழியில் எம்.எஸ்.வி சொன்ன அத்தனையும் வாலியிடம் சொல்லிவிடுகிறார்.
இதை கேட்ட வாலி இனிமேல் சென்னையில் இருப்பதில் அர்த்தமில்லை என்று முடிவு செய்து திருச்சிக்கு புறப்பட தயாரானபோது, கோபாலகிருஷ்ணன் அவரை விடவில்லை. அதன்பிறகு இசையமைப்பாளர் ஜி.கே. வெங்கடேஷ் வாலிக்கு அவ்வப்போது உதவி செய்துள்ளார். ஆனாலும் வாலியின் நிலையை பார்த்த ஜி.கே.வெங்கடேஷ் அவருக்கு ஒரு வேலை ஏற்பாடு செய்கிறார். ஆனால் நான் பாடல் எழுத்தான் வந்தேன் என்று வாலி சொல்ல இதுவும் பாடல் எழுதும் வேலை தான் கண்ணதாசனிடம் உதவியாளராக உன்னை சேர்த்துவிட போகிறேன் என்று கூறியுள்ளார்.
அவர் பாடல் சொல்ல சொல்ல நீ எழுத வேண்டும் மாதம் ரூ300 உனக்கு சம்பளம் சென்று சொல்ல வாலி நெருங்கிக்போனார். ஆனாலும் அண்ணே கண்ணதாசனுக்கு எதிராக பாடல் எழுத தான் நான் வந்தேன். ஆனால் அவரிடமே உதவியாளராக சேர்ந்தால் எப்படி நான் முன்னேற முடியும் என்று சொல்ல, கோபமான ஜி.கே.வெங்கடேஷ் நீ உருப்படவே மாட்ட, என்று சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுள்ளார். அதன்பிறகு வாலி தனக்கென தனி பாணி அமைத்து தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கவிஞராக உருவெடுத்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.