தமிழ் சினிமாவில் தற்போது பாடல்கள் யாருக்கு சொந்தம் என்பது குறித்து விவாதம் நடைபெற்று வரும் நிலையில், க்ளாசிக் சினிமா காலத்தில், நெகட்டீவ் உரிமையை பற்றி யோசிக்காமல் இருந்த இரு பெரும் தயாரிப்பாளருளின் குடும்பம் இப்போது என்ன நிலையில், இருக்கிறது தெரியுமா?
Advertisment
தமிழ் சினிமாவில் வில்லன் நடிகருக்கு பெயர் பெற்றவர் பி.எஸ்.வீரப்பா. இவரது சிரிப்பு சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம். தற்போது வரும் டிஜிட்டல் சினிமாவில் கூட யாராவது நீண்ட சிரிப்பு சிரித்தால் பெரிய பி.எஸ். வீரப்பானு நினைப்பு என்று சொல்வார்கள். அந்த அளவிற்க பிரபலமான பி.எஸ்.வீரப்பா, பஞ்ச் டைலாக் பேசிய முதல் வில்லன் நடிகரு என்று சொல்லலாம். எம்.ஜி.ஆருக்கு நிகரான ஒரு வில்லன் என்று பெயரெடுத்தவர்.
ஒரு கட்டத்தில் படம் தயாரிக்க தொடங்கிய பி.எஸ்.வீரப்பா, 1958-ம் ஆண்டு வெளியான பிள்ளை கனியமுது என்ற படத்தை தயாரித்திருந்தார். அதன்பிறகு ஆலயமணி உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை தயாரித்த இவர், ஒரு கட்டத்தில் பலத்த நஷ்டத்தை சந்தித்துள்ளார். பொருளாதார நெருக்கடி காரணமாக தனக்கு இருந்த 3 பெரிய வீட்டில் 2 வீடுகளை கடனுக்காக எழுதிக்கொடுத்த நிலையில், கடன் நெருக்கடி அதிகமானதால் தான் தங்கியிருந்த வீட்டையும் எழுதிக்கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அந்த காலக்கட்டத்தில் முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர், பி.எஸ்.வீரப்பாவுக்காக அரசின் சார்பில் ஒரு வீடு ஒதுக்கி அவர்களை அதில் தங்க வைத்துள்ளார். இந்த கடன் தொல்லைகளை நேரில் பார்த்த பி.எஸ்.வீரப்பாவின் பேரன் தனது 16-வது வயதில் தற்கொலை செய்துகொண்டதாகவும் தகவல்கள் உள்ளது.
Advertisment
Advertisements
பி.எஸ்.வீரப்பா போன்று, க்ளாசிக் சினிமாவில் தயாரிப்பாளராக கொடிகட்ட பறந்தவர் தான் சாண்டோ எம்.எம்.ஏ சின்னப்ப தேவர். எம்.ஜி.ஆர். நடிப்பில் அதிக படங்களை தயாரித்த பெருமை கொண்ட இவர், பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். அவரது தம்பி எம்.எம்.ஏ. திருமுகம், சிறந்த இறக்குனராகவும், படத்தொகுப்பாரளாகவும் இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் சின்னப்ப தேவர் மறைந்த நிலையில், அவரது பட தயாரிப்பு நிறுவனமான தேவர் பிலிம்ஸ், தண்டாயுதபாணி பிலிம்ஸ் என இரு நிறுவனங்களும் வீழ்ச்சியை சந்தித்தது. தற்போது சின்னப்பா தேவரின் மகன், தனது உறவினர்களின் ஊரில் தங்கியிருப்பதாக தகவல்கள் உள்ளது.
க்ளாசிக் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளர்களாக இருந்த பி.எஸ்.வீரப்பா, சின்னப்ப தேவர் இருவருமே வீழ்ச்சியை சந்திக்க முக்கிய காரணம் நெகட்டீவ் ரைட்ஸ் வாங்காமல் இருந்தது தான். தற்போது சினிமா டிஜிட்டல் முறையில் படமாக்கப்பட்டு வந்தாலும், க்ளாசிக் சினிமா காலத்தில். பிலிமில் படமாக்கினார்கள். இந்த பிலிம் நெகடீவ்களை படம் வெளியாகும்போது விநியோகஸ்தர்கள் வாங்கி செல்வார்கள். 5 வருடங்கள் கழித்து இந்த நெகடீவ் தயாரிப்பாளரின் கைக்கு வரும்.
அதன்பிறகு தயாரிப்பாளர்கள் அந்த நெகடீவை யாருக்கு வேண்டுமானாலும் விற்கலாம். ஆனால் பி.எஸ்.வீரப்பா, சின்னப்ப தேவர் இருவருமே இதை பற்றி கண்டுகொள்ளாததால், அவர்கள் தாயரித்த பல படங்களில் நெகடீவ்கள் மூலம் பலரும் லாபம் பார்த்து வருகின்றனர். இந்த தகவலை ஆலங்குடி வெள்ளைச்சாமி தனது யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“