கமல்ஹாசன் – ரஜினிகாந்த் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் ஆரம்பத்தில் படங்களில் ஒன்றாக் இணைந்து நடித்தனர். ஒரு கட்டததில் இருவரும் தனித்தனியாக நடிக்க தொடங்கிய நிலையில், தற்போதுவரை இவர்கள் இணைந்து படததில் நடிக்கவிலலை. அப்படி இருந்தும், கமல்ஹாசன் படத்தில் ரஜினிகாந்த் டைட்டில் கொடுத்துள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல வெற்றிப்படங்களில் நடித்தவர் கமல்ஹாசன். இயக்குனர் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியாக அறங்கேற்றம் படத்தின் மூலம் தமிழில் நாயகனாக அறிமுகமாக கமல்ஹாசன், தொடர்ந்து அவரது இயக்கத்தில் பல படங்களில் நடித்துள்ளார். அதேபோல் கே.பாலச்சந்தரால் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டவர் தான் ரஜினிகாந்த்.
1975-ம் ஆண்டு வெளியான அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் ரஜினிகாந்த் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் கமல்ஹாசனும் இணைந்து நடித்திருந்தார். அதன் பிறகு இருவரும் இணைந்து வெற்றிப்படங்களை கொடுத்த நிலையில், கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான நினைத்தாலே இனிக்கும் படம் தான் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த கடைசி படம். அதன்பிறகு இருவரும் தனியாக ஹீரோவாக நடிக்க தொடங்கினர். இதில் ரஜனிகாந்த் ஆக்ஷன் கதைகளை தேர்வு செய்து நடிக்க தொடங்கினார்.
மறுபக்கம் கமல்ஹாசன், கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் சோதனை முயற்சியாக பல படங்களை கொடுத்தார். அதேபோல் காமெடியிலும் பல படங்களை கொடுத்துள்ளார். இவர்கள் இருவருக்கும் நெருக்கமான ஒரு இயக்குனர் தான். கே.எஸ்.ரவிக்குமார். இந்த காலக்கட்டத்தில் ரஜினி – கமல் இருவரையும் இணைத்து படம் இயக்கும் திறமை இவருக்கு மட்டும் தான் இருக்கிறது என்று திரைத்துறையில் பலரும் கூறி வருகின்றனர்.
இயக்குனர் மட்டுமல்லாமல், ஒரு தயாரிப்பாளராகவும் முத்திரை பதித்தவர் தான் கே.எஸ்.ரவிக்குமார். இவர் முதன் முதலில் தயாரிப்பாளராக அறிமுகமான படம் தெனாலி. இந்த படத்தின் கதையை யோசித்த கே.எஸ்.ரவிக்குமார், கமல்ஹாசனிடம் கூறியுள்ளார். அவரும் ஓகே சொல்ல, படத்திற்கு திரைக்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளர். அப்போது ரஜினிகாந்த் தினமும் இன்னைக்கு என் சீன பண்ணீங்க, என்ன புதுசா பண்ணீங்க என்று கேட்டுக்கொண்டே இருந்துள்ளார். அப்போது கோமாளியாக இருந்தாலும் புத்திசாலியாக இருக்கிறானே தெனாலி ராமன் மாதிரி என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
மேலும் இந்த படத்திற்கு தெனாலி என்று டைட்டில் வைத்தால் எப்படி இருக்கும் என்று கேட்டுள்ளார். இதை கேட்ட கே.எஸ்.ரவிக்குமார், தெனாலி நல்லா இருக்கு என்று சொல்ல, இதை நான் சொன்னேன் என்று கமல்ஹாசனிடம் சொல்லிவிடாதீர்கள் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார். அப்படி கமல்ஹாசனுக்கு சொல்லாமல், டைட்டில் வைக்கப்பட்டு, படம் வெளியாகி வெள்ளி விழா கொண்டாடிய நிலையில், இந்த விழாவில், கமல்ஹாசனிடம் கே.எஸ்.ரவிக்குமார் இந்த படத்தின் டைட்டில் ரஜினிகாந்த் கொடுத்தது என்று கூறியுள்ளார்.