Advertisment

ஒரு போட்டோவால் வந்த வினை... படத்தை வாங்க மறுத்த விநியோகஸ்தர்கள் : ரஜினி படத்துக்கு வந்த சோதனை

அபூர்வ ராகங்கள் என்ற படத்தின் மூலம் அறிமுகமான ரஜினிகாந்த், தொடர்ந்து பல படங்களில் கமல்ஹாசன், விஜயகுமார் உள்ளிட்ட நடிகர்களுடன் இணநை்து நடித்திருந்தார்.

author-image
WebDesk
Sep 30, 2023 13:28 IST
New Update
Rajinikanth Kabal

ரஜினிகாந்த்

வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் உன்னை விட்டு போகல என்று படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன் சொல்லும் டைலாக இப்போதும ரஜினிக்கு பொருத்தமாகத்தான் இருக்கிறது. சமீபத்தில் வெளியான அவரின் ஜெயிலர் திரைப்படம் இதற்கு ஒரு முக்கிய எடுத்துக்காட்டு என்று சொல்லும் அளவுக்கு படம் வசூலில் பெரிய வெற்றியை கொடுத்துள்ளது.

Advertisment

1975-ம் ஆண்டு வெளியான கே.பாலச்சந்தரின் அபூர்வ ராகங்கள் என்ற படத்தின் மூலம் அறிமுகமான ரஜினிகாந்த், தொடர்ந்து பல படங்களில் கமல்ஹாசன், விஜயகுமார் உள்ளிட்ட நடிகர்களுடன் இணநை்து நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து பைரவி என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான ரஜினிகாந்த், 1980-களில் பல படங்களில் ஹீரோவாக நடித்து வந்தார்.

மேலும் மக்கள் மத்தியில் மாஸ் ஹீரோவாக ஆக வேண்டும் என்றால், ஆக்ஷன் படங்களில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்த ரஜ்னிகாந்த் அதே ரூட்டில் தனது பயணத்தை தொடர்ந்தார். அந்த வகையில் 1980-ம் ஆண்டு ஐ.வி.சசி இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த படம் காளி. ரஜினிகாந்த் விஜயகுமார், படாபட் ஜெயலட்சுமி, மேஜர் சுந்தர்ராஜன் மனோரமான உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு மகேந்திரன் திரைக்கதை எழுதியிருந்தார்.

இந்த படத்தின் படப்பிடிப்பின்போது நடிகர் ரஜினிகாந்த் பத்திரிக்கையாளர் ஒருவருக்கு விதவிதமாக போஸ் கொடுத்து போட்டோ எடுத்துள்ளார். இதில் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக கழுத்தில் கயிறு சுற்றி போட்டோ எடுத்துள்ளார். இந்த போட்டோ அப்போது பத்திரிக்கைகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது.

Rajinikanth Kaali

அதன்பிறகு படப்பிடிப்பு முடிந்து விநியோகஸ்தர்கள் படத்தை பார்த்தபோது ரஜினிகாந்த் கயிறை சுற்றிக்கொண்டு வரும் காட்சி இல்லை. இது குறித்து இயக்குனரிடம் கேட்டபோது அப்படி ஒரு காட்சி படமாக்கவே இல்லை என்று கூறியுள்ளார். இதை கேட்ட விநியோகஸ்தர்கள் அந்த காட்சி இருந்தால் தான் படத்தை வாங்குவோம் என்று கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த இயக்குனர் மீண்டும் அந்த காட்சியை ஷூட் செய்து படத்தில் இணைத்துள்ளனர்.

அதன்பிறகு படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் படத்தை வெளியிட்டுள்ளனர். 1980-ம் ஆண்டு ஜூலையில் தமிழில் வெளியான காளி படம் தோல்வியடைந்த நிலையில்,

அதே ஆண்டு செப்டம்பர் மாதம் தெலுங்கிலும் வெளியாகி தோல்வியை சந்தித்தது. தமிழில் விஜயகுமார் நடித்த கேரக்டரில் தெலுங்கில் சிரஞ்சீவி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Superstar Rajinikanth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment