இந்திய மொழிகள் பலவற்றில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ள பின்னணி பாடகி எஸ்.ஜானகி கமல்ஹாசன் நடித்த ஒரு படத்தில் பாடிய பின்புதான் தமிழ் சினிமாவில் தனது மார்க்கெட் வீழ்ச்சியடைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
Advertisment
இந்திய சினிமாவின் முன்னணி பின்னணி பாடகிகளில் முக்கியமானவர் எஸ்.ஜானகி. 1957-ம் ஆண்டு எஸ்.எஸ்.ராஜன் இயக்கத்தில் மகதல நாட்டு மேரி என்ற படத்தின் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமான இவர், தொடர்ந்து, கே.வி.மகாதேவன், எம்.எஸ்.வி, இளையராஜா, சங்கர் கணேஷ், தேவா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்கள் பலரின் இசையில் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.
கடைசியான ஜீவா நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான திருநாள் படத்தில் தந்தையும் யாரோ என்ற பாடலை பாடியிருந்தார். தமிழ் மட்டுமல்லாமல் இந்திய தெலுங்கு கன்னடம் மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பல ஹிட் பாடல்களை பாடியுள்ள எஸ்.ஜானகி, தனது மார்க்கெட் எந்த படத்திற்கு பிறகு சரிந்தது, அதன்பிறகு எப்போது தனக்கு வாய்ப்புகள் அதிகரித்தது என்பது குறித்து ஒரு மேடையில் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு காலத்தில் தமிழில் பல பாடல்களை பாடிக்கொண்டிருந்தேன். இளையராஜா அன்னக்கிளி படம் தொடங்கியதில் இருந்து அவரின் இசையில் தொடர்ந்து பாடல்களை பாடி வந்தேன். தினமும் பாடல் ரொக்கார்டிங் இருக்கும். சில வருடங்கள் போனபிறகு அந்த வாய்ப்புகள் குறைய தொடங்கியது. அதன்பிறகு 1992-ம் ஆண்டு வெளியான கமல்ஹாசனின் சிங்காரவேலன் படத்தில் பாடியவுடன் எனக்கு வாய்ப்புகள் குறைந்துவிட்டது.
அந்த காலத்தில் மக்கள் என்னை மறந்தபோது, அன்னிக்கிளி தொடங்கி பல பாடல்களை கொடுத்து மக்கள் மத்தியில், என்னை நினைவுக்கு கொண்டுவந்தவர் இளையராஜா. அதன்பிறறு சிங்காரவேலன் படத்திற்கு பிறகு மக்கள் என்னை மீண்டும் ஒருமுறை மறக்கும் நிலை ஏற்பட்டபோது, ஏ.ஆர்.ரஹ்மான் வந்தார். ரகுமான் இசையில் சில பாடல்களே பாடியிருந்தாலும், இந்த நெஞ்சினிலே பாடல் என்னை பலதரப்பட்ட மக்களிடையே கொண்டு சென்றது. அனைவரின் நெஞ்சிலும் நான் நின்றுவிட்டேன் என்று எஸ்.ஜானகி கூறியுள்ளார்.
1998-ம் ஆண்டு ஷாருக்கான் மனிஷா கொய்ராலா நடிப்பில் வெளியான தில் சே (தமிழில் உயிரே) படத்தின் தமிழ் பதிப்பில் இடம் பெற்ற நெஞ்சினிலே பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“