இந்திய சினிமாவில் பல மொழிகளில் ஹிட் பாடல்களை கொடுத்துள்ள எஸ்.ஜானகி மேடை கச்சேரியின் போது ஒரு ரசிகர் கண்ணீர் விட்டு அழுத சம்பவம் குறித்து ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
Advertisment
இந்திய சினிமாவின் முன்னணி பின்னணி பாடகிகளில் முக்கியமானவர் எஸ்.ஜானகி. 1957-ம் ஆண்டு எஸ்.எஸ்.ராஜன் இயக்கத்தில் மகதல நாட்டு மேரி என்ற படத்தின் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமான இவர், தொடர்ந்து, கே.வி.மகாதேவன், எம்.எஸ்.வி, இளையராஜா, சங்கர் கணேஷ், தேவா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்கள் பலரின் இசையில் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.
கடைசியான ஜீவா நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான திருநாள் படத்தில் தந்தையும் யாரோ என்ற பாடலை பாடியிருந்தார். தமிழ் மட்டுமல்லாமல் இந்திய தெலுங்கு கன்னடம் மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பல ஹிட் பாடல்களை பாடியுள்ள எஸ்.ஜானகி, ஒரு மேடைக்கச்சேரியில் தான் பாடும்போது ஒரு குறிப்பிட்ட பாடலுக்காக ஒரு ரசிகர் என் காலில் விழுந்து கண்ணீரிலேயே தனது காலை கழுவினார் என்று ஜானகி கூறியுள்ளார்.
வில்லனாக நடித்து வந்த நடிகர் சத்யராஜ் முதன் முதலில் ஹீரோவாக நடித்த படம் கடலோர கவிதைகள். பாரதிராஜா இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் ரேகா, ராஜா, ஜனகராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்த இந்த படத்திற்கு, வைரமுத்து, கங்கை அமரன் ஆகியோர் பாடல்கள் எழுதியிருந்தனர். படத்தின் அனைத்து பாடல்களும் ஹிட் அடித்திருந்த நிலையில், அடி ஆத்தாடி என்ற தொடங்கும் பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த பாடலை எஸ்.ஜானகி பாடியிருந்தார். இந்த படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்ட சிரஞ்சீவி, சுஹாசினி இணைந்து நடித்திருந்தனர். பாரதிராஜா இயக்கிய இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்த நிலையில், தெலுங்கிலும் எஸ்.ஜானகியே இந்த பாடலை பாடியிருந்தார். ஒரு மேடை கச்சேரியில், இந்த பாடலை எஸ்.ஜானகி பாட தொடங்கும்போது திடீரென ஒரு ரசிகர் அவரது காலில் விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சியாக அவர். பாடலை நிறுத்திவிட்டு, அவரை தூக்க அவர் கண்களில் கண்ணீருடன் இருந்துள்ளார். அதன்பிறகு அவரை சமாதானம் செய்த எஸ்.ஜானகி அன்று அவர் கண்ணீரால் என் கால்களை கழுவி விட்டார் என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“