தனது குரலின் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ள பாடகி எஸ்.ஜானகி, தான் பாடிய ஒரு தாலாட்டு பாடலை பாடி முடித்தவுடன், தனக்கு ஒரு பிரதி கிடைக்குமா என்று கேட்டு வாங்கி சென்றுள்ளார்.
Advertisment
இந்திய சினிமாவின் முன்னணி பின்னணி பாடகிகளில் முக்கியமானவர் எஸ்.ஜானகி. 1957-ம் ஆண்டு எஸ்.எஸ்.ராஜன் இயக்கத்தில் மகதல நாட்டு மேரி என்ற படத்தின் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமான இவர், தொடர்ந்து, கே.வி.மகாதேவன், எம்.எஸ்.வி, இளையராஜா, சங்கர் கணேஷ், தேவா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்கள் பலரின் இசையில் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.
கடைசியான ஜீவா நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான திருநாள் படத்தில் தந்தையும் யாரோ என்ற பாடலை பாடியிருந்தார். தமிழ் மட்டுமல்லாமல் இந்திய தெலுங்கு கன்னடம் மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பல ஹிட் பாடல்களை பாடியுள்ள எஸ்.ஜானகி, ரத்னா படத்தில் இடம்பெற்ற ஒரு தாலாட்டு பாடலை பாடியிருந்த நிலையில், அந்த பாடலின் வரிகளில் மூழ்கிப்போய் அந்த பாடலை ஒரு பிரதி கிடைக்குமா என்று கேட்டு வாங்கி சென்றுள்ளார்.
1998-ம் ஆண்டு முரளி இரட்டை வேடங்களில் நடித்து வெளியான படம் ரத்னா. சங்கீதா, ரேவதி, வடிவேலு, மகேஷ்வரி உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்தை அறிமுக இயக்குனர், இளஞ்செழியன் இயக்கிய நிலையில், அறிமுக இசையமைப்பாளரான ஜெயசூர்யா (இப்போது அமுத பாரதி) இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. எஸ்.பி.பி, சொர்ணலதா, சித்ரா உள்ளிட்ட சிலர் இந்த படத்தில் பாடல்கள் பாடியிருந்த நிலையில், எஸ்.ஜானகி ஒரு தாலாட்டு பாடலை மட்டும் பாடியிருந்தார்.
கவிஞர் முத்துலிங்கம் எழுதிய ‘’சந்தன காற்றே’’ என்று தொடங்கும் இந்த பாடல் முற்றிலும் வித்தியாசமான முறையில் இசையமைக்கப்பட்டிருந்த ஒரு பாடலாகும். மேலும் இந்த பாடல் தாலாட்டாக தொடங்கி இடையில் சண்டைக்காட்சி அதன்பிறகு தாலாட்டுடன் பாடல் முடிந்திருக்கும். எஸ்.ஜானகி இந்த பாடலை பாடி முடித்தபின், இந்த பாடலின் பிரதி எனக்கு வேண்டும் என்று கேட்டுள்ளார். இதை கேட்ட தயாரிப்பாளர், படத்தின் ஆடியோ வெளியிடாமல் பாடலை எப்படி கொடுப்பது என்று கேட்டுள்ளார்.
இந்த படத்தின் சவுண்ட் இன்ஜினியர் இந்த பாடல் அவருக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. இரவில் தனியாக கேட்க வேண்டும் என்று விரும்புகிறார். ஆடியோ வெளியிடாமல் பாடல் வெளியாகாது என்று அவருக்கும் தெரியும். அதனால் கொடுத்துவிடலாம் என்று சொல்ல, அதன்பிறகு எஸ்.ஜானகிக்கு அந்த பாடலின் பிரதி கொடுக்கப்பட்டுள்ளது. தான் பாடிய ஒரு பாடலில் மயங்கி அந்த பாடலின் பிரதியை எஸ்.ஜானகி பாடி முடித்தவுடனே வாங்கி சென்றது பலரும் அறியாத ஒரு தகவல்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“