கமல்ஹாசன் கேட்ட மெட்டு; 'சரியா வருமா?' என தயங்கிய இளையராஜா; ஆனா பாட்டு சூப்பர் டூப்பர் ஹிட்!

இளையராஜா - கமல்ஹாசன் - வாலி கூட்டணியில் உருவான இந்த பாடல் இன்றும் காதலர்களின் ரிங்டோனாக ஒலித்துக்கொண்டு இருக்கிறது.

இளையராஜா - கமல்ஹாசன் - வாலி கூட்டணியில் உருவான இந்த பாடல் இன்றும் காதலர்களின் ரிங்டோனாக ஒலித்துக்கொண்டு இருக்கிறது.

author-image
WebDesk
New Update
Kamal Haasan and Va

கமல்ஹாசன் நடிப்பில் வெளியான சத்யா படத்தில் இடம் பெற்ற, பெரிய ஹிட் பாடல் ஒன்றின், டியூனை கேட்ட கமல்ஹாசன் தனக்கு பிடிக்கவில்லை என்றும், இந்த மாதிரி வேறு டியூன் போட சொல்லி கேட்டுள்ளார். அந்த டியூனை கேட்ட இளையராஜா சரியாக வருமா என்ற தயக்கத்துடன் இசையமைத்துள்ளார்.

Advertisment

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் நடிப்பில் பாட்ஷா என்ற பெரிய வெற்றிப்படத்தை கொடுத்தவது சுரேஷ் கிருஷ்ணா. இவர் முதன் முதலில் இயக்குனராக அறிமுகமான படம் சத்யா. இந்தியில் வெளியான அர்ஜூன் என்ற படத்தின் ரீமேக்காக வெளியான இந்த படத்தில், கமல்ஹாசன், அமலா இணைந்து நடித்திருந்தனர். அரசியல்வாதிகளின் சூழ்ச்சியின் காரணமாக இளைஞர்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பதே இந்த படத்தின் திரைக்கதை. 

இளையராஜா இசையமைத்த இந்த படத்திற்கு அனைத்து பாடல்களையும் கவிஞர் வாலி எழுதியிருந்தார். படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. குறிப்பாக இந்த படத்தில் வரும் ‘வலையோசை கலகலவென’ என்ற பாடல் இன்றும் இளைஞர்களின் ரிங்டோனாக ஒலித்துக்கொண்டு இருக்கிறது. இந்த பாடல் உருவான விதம் குறித்து இளையராஜா ஒரு மேடை கச்சேரியில் பேசியுள்ளார்.

இந்த பாடலுக்காக முதலில் இளையராஜா ஒரு ஹம்மிங்கை உருவாக்கியுள்ளார். இதை கேட்ட கமல்ஹாசன், இதையே ஒரு பாடலாக மாற்றி கொடுங்கள் என்று கூறியுள்ளார். இதை கேட்ட இளையராஜா, நான் ஒரு மியூக்கல் பாடலாக டியூன் அமைத்து ப்ளான் பண்ணிருக்கேன் என்று சொல்ல, இல்ல இல்ல இதையே எனக்கு பாட்டாக மாற்றி கொடுங்கள் என்று கேட்டுள்ளார். இதை பாட்டாக மாற்றலாம் ஆனா சரியாக வருமா என்று தெரியவில்லை என சொல்ல, ஏன் சரியாக வராது சொல்லுங்க என்று கமல் கேட்க,நான் ஒரு ஃப்ரூட்டுக்காக போட்ட இசை இது என்று கூறியுள்ளார். 

Advertisment
Advertisements

அந்த பாடல் தான் வலையோசை கலகலவென பாடல். எஸ்.பி.பாலசுப்பிரமணியன், லதா மங்கேஷ்கர் ஆகியோர் பாடிய இந்த பாடல் பெரிய வெற்றியை பெற்ற நிலையில், இன்றும் காதலர்களின் பேவரேட் பாடலாக ஒலித்துக்கொண்டு இருக்கிறது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: