க்ளாசிக் சினிமாவில் முன்னணி நடிகையாக பல வெற்றிப்படங்களை கொடுத்திருந்த நடிகை சாவித்தி, உச்ச நட்சத்திரமாக இருந்தபோதும் கூட அவர் நடித்த காட்சிகளை டெலிட் செய்துவிட்டு புதிதாக ஷூட் செய்ய வேண்டும் என்று ஏ.வி.எம்.நிறுவனர் கூறியுள்ளார். ஏன் தெரியுமா?
Advertisment
தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடி என்று எடுத்துக்கொண்டால் அதில் ஜெமினி – சாவித்ரி ஜோடிக்கு முக்கிய இடம் உண்டு. இவர்கள் இருவரும் இணைந்து பல வெற்றிப்படங்களில் நடித்திருந்த நிலையில், இவர்களின் காதல் சம்பவங்கள் குறித்து இப்போதும் பல பிரபங்கள் பேசி வருகின்றனர். அதேபோல் நடிப்பு மட்டுமல்லாமல், இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் இருந்த சாவித்ரி, எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகியோருடனும் பல படங்களில் நடித்துள்ளார்.
இன்றைய தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள், நடிகர்களின் பின்னால் செல்கிறார்கள் என்ற பேச்சு அதிகம் இருந்து வருகிறது. ஆனால் க்ளாசிக் சினிமாவில், தயாரிப்பாளர் என்ன சொல்கிறாரோ அதை இயக்குனர், நடிகர்கள் என அனைவருமே கடைபிடிக்க வேண்டும் என்ற விதிமுறை உண்டு.ஒரு காட்சி சரியாக எடுக்கப்பட்டதா என்பது குறித்து தினமும் தான் தயாரிக்கும் படங்களின் காட்சிகளை ஆய்வு செய்து வருபவர் ஏ.வி.மெய்யப்ப செட்டியார்.
அந்த வகையில் களத்தூர் கண்ணம்மா என்ற ஒரு படத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. கே.எஸ்.கோபால கிருஷ்ணன் இயக்கத்தில் கடந்த 1960-ம் ஆண்டு வெளியான இந்த படத்தை முதலில் ஒரு தெலுங்கு பட இயக்குனர் படத்தை இயக்கியுள்ளார். ஜெமினி கணேசன், சாவித்ரி இணைந்து நடித்த இந்த படத்தில், நடிகர் கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானா, இந்த படத்தில் ஒரு விவசாயி மகளாக நடித்திருந்த சாவித்ரி ஒரு பாடலுக்கு நடனமாடும் காட்சி படமாக்கப்பட்டுள்ளது.
Advertisment
Advertisements
எப்போதுமே காட்சிக்கு தகுந்தார்போல், வீட்டில் இருந்தே மேக்கப் போட்டுக்கொண்டு வரும் சாவித்ரி, இன்றைய தினம், ஒரு விவசாயி மகள்போல் இல்லாமல், பணக்கார பெண்போல் தன்னிடம் இருக்கும் தங்கம், வைரம், பிளாட்டினம் உள்ளிட்ட அனைத்து நடிகைகளையும் அணிந்துகொண்டு வந்து நடித்தார். இதை இயக்குனரும் கண்டுகொள்ளாமல், அந்த பாடல் காட்சியை படமாக்கியுள்ளார். அன்று ஷூட் செய்யப்பட்ட காட்சிகளை மாலையில் பார்த்த ஏ.வி.எம் செட்டியார், இயக்குனரை அழைத்து கேட்டுள்ளார்
இந்த பாடலில், அந்த பெண் யாருடைய மகள் என்று கேட்க, ஒரு விவசாயி மகள் என்று இயக்குனர் சொல்ல, இந்த பாடலில் அவர் ஒரு விவசாயி மகள் போல் ஒன்றும் தெரியவில்லையே அவ்வளவு அடம்பரமாக இருக்கிறதே என்று சொல்ல, இல்லை அந்த பெண் வெளியூரில் படித்து வந்தவர் என்று இயக்குனர் சொல்ல, வெளியூரில் படிக்கும் விவசாயி மகள்கள் எல்லாம் இப்படித்தான் இருக்கிறார்களா என்று கேட்டுள்ளார் ஏ.வி.எம்.செட்டியார்.
அதன்பிறகு இந்த பாடல் காட்சியை முற்றிலும் எடுத்துவிடுங்கள். சாவித்ரியிடம் சொல்லுங்கள். எனக்கு இந்த காட்சி பிடிக்கவில்லை. மீண்டும் இந்த காட்சியை படமாக்குங்கள் என்று கூறியுள்ளார். அதன்படி சாவித்ரியிடம் சொல்ல, அவரும் ஓகே என்று கூறியுள்ளார். அதன்பிறகு அந்த பாடல் காட்சி மீண்டும் படமாக்கப்பட்டு படத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. அந்த பாடல் தான் ஆடாத மனமே என்ற பாடல்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“