தமிழ் சினிமாவில் இயக்குனர் திலகம் என்று பெயரேடுத்து கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், தான் திரைக்கதை வசனம் எழுதிய ஒரு படத்திற்கு, 3 நடிகைகள் பரிந்துரை செய்யப்பட்டாலும், அந்த வாய்ப்பை சவுக்கார் ஜானகிக்கு பெற்றுகொடுத்துள்ளார். இதற்காக அவர் கே.எஸ்.கோபாலகிருஷணனுக்கு விருந்து கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் ப வரிசை படங்களை இயக்கி வெற்றி கண்டவர் இயக்குனர் பீம்சிங். சிவாஜி நடிப்பில் பல வெற்றிப்படங்களை கொடுத்த இவர், 1960-ம் ஆண்டு இயக்கிய படம் படிக்காத மேதை. 1953-ம் ஆண்டு பெங்காலி மொழியில் வெளியான ஜோக் பயோக் என்ற படத்தின் ரீமேக் தான் இந்த படத்தில் சிவாஜி கணேசன் நாயகனாக நடித்திருந்தார். ஆரம்பத்தில், இந்த படத்தை பார்த்து பல இயக்குனர்கள் பிடிக்கவில்லை.
அதே சமயம் இந்த படத்தை பார்த்த இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், இதில் வரும் ரங்கன், ராவ் பகதூர் கேரக்டரை வைத்து பல படங்கள் எடுக்கலாம் என்று கூறியுள்ளார். இதை கேட்ட படத்தின் தயாரிப்பாளர், இந்த படத்திற்கு, வசனம் எழுதும் பொறுப்பை அவருக்கு கொடுத்துள்ளார். இது குறித்து சிவாஜியிடமும் தயாரிப்பாளர் கூறியுள்ளார். அதன்பிறகு படத்தில் நாயகியாக நடிக்க, சில கவர்ச்சி நடிகைகளின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து கேள்விப்பட்ட, கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், இந்த கேரக்டர், அன்பு, பாசம், கருணை என அனைத்தையும் நடிப்பில் காட்ட வேண்டிய கேரக்டர். இதற்கு சவுக்கார் ஜானகிதான் பொருத்தமாக இருப்பார் என்று தயாரிப்பாளிடம் சொல்ல, அவர் இவரது பேச்சை கேட்பதாக தெரியவில்லை. ஒரு கட்டத்தில் சவுக்கார் ஜானகியை புக் செய்தால் தான் இந்த படத்தில் பணியாற்றுவேன் என்று முடிவு செய்த கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், இது குறித்து சிவாஜி கணேசனிடம் கூறியுள்ளார்.
அப்போது அவரை வரவேற்ற சிவாஜி, என்னப்பா யூனிட்டில் இருக்கும் அனைவரும், இந்த படத்தில் நாயகியாக சவுகார் ஜானகி தான் வேண்டும் என்று சொல்ல, நீ மட்டும் வேண்டாம் என்று சொல்கிறாயாமே என்று கேட்க, கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அதிர்ச்சியாகியுள்ளார். அதன்பிறகு, யார் அந்த கேரக்டரில் நடித்தால் நன்றாக இருக்கும் என்று உங்கள் விருப்பம் என்ன என்று சிவராஜியிடம் கேட்க, அவர் சவுக்கார் ஜானகியின் பெயரை கூறியுள்ளார். இதை கேட்டு கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் மகிழ்ச்சி அடைய அந்த செட்டில் இருந்த சவுகார் ஜானகி, இன்று இரவு வீட்டில் விருந்து நிகழ்ச்சி அதில் நீங்களும் கண்டிப்பாக கலந்துகொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
அதன்படி, இரவு 7 மணிக்கு, கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், சவுக்கார் ஜானகி வீட்டுக்கு போக, அங்கு அவருக்கு மட்டுமே விருந்து என்று தெரிவந்துள்ளது. இது குறித்து சவுக்கார் ஜானகியிடம், கேட்க, படிக்காத மேதை படத்தில் பத்மினி, சாவித்ரி, சரோஜா தேவி ஆகியோரை போடலாம் என்று சொல்லும்போது சவுக்கார் ஜானகி நடித்தால் தான் சரியாக இருக்கும் என்று நீங்கள் தான் சொல்லியதாக, சிவாஜியும், தயாரிப்பாளரும் பேசும்போது என் பணிப்பெண் கேட்டு என்னிடம் சொன்னார்.
அதை கேட்டவுடன், உங்களுக்கு விருந்து கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். அதற்காக தான் இந்த மாலை என்று கூறி ஆள் உயர மாலையை அவருக்கு அணிவித்து, காலில் விழுந்து வணங்கியுள்ளார் சவுக்கார் ஜானகி. சிவாஜி, எஸ்.வி.ரங்காராவ், சவுக்கார் ஜானகி ஆகிய 3 பேரும் போட்டி போட்டு நடித்த இந்த படம் பெரிய வெற்றியை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“