கல்லூரி தேர்வு இருந்ததால், இளையராஜா கேட்டும் தான் பாடல் பாட மறுத்ததாக கூறிப்பிட்டுள்ள பாடகி கே.எஸ்.சித்ரா, அதன்பிறகு அந்த கல்லூரி தேர்வை என்னால் எழுத முடியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
கேரளா மாநிலத்தை சேர்ந்த பாடகி கே.எஸ்.சித்ரா, இந்திய சினிமாவின் முன்னணி பாடகியாக இருந்து வருகிறார். தமிழ் தெலுங்கு மலையாளம், கன்னடம் இந்தி, பெங்காலி, ஒடியா, பஞ்சாபி உள்ளிட்ட ஏராளமான மொழிகளில் பல படங்களில் தனது இனிமையான குரலின் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். அதேபோல் இளையராஜா, எம்.எஸ்.வி, சங்கர் கணேஷ், தேவா, ஏ.ஆர்.ரஹ்மான், என பல இசையமைப்பாளர்களின் இசையில் பாடியிருக்கிறார்.
கடைசியாக பொன்னியின் செல்வன் 2 படத்தில் வீரா ராஜ வீரா என்ற பாடலை பாடியிருந்தார், இந்திய சினிமாவில் பல மொழிகளில் பாடியுள்ள கே.எஸ்.சித்ரா, தமிழில் கடந்த 1985-ம் ஆண்டு வெளியான சிந்து பைரவி படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமானார். இந்த படத்தில் இவரது குரலில் வெளியான ‘’நானொரு சிந்து காவடி சிந்து’’ என்ற பாடலை பாடியிருந்தார். இந்த பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்த பாடலை பதிவு செய்து முடித்தபின் ஸ்டூடியோவில் இருந்து கிளம்பும்போது, இளையராஜா, இந்த படத்தின் இன்னொரு பாடல் இருக்கிறது பாடிட்டு போறீங்களா என்று கேட்டார். ஆனால் அடுத்தால் எனக்கு எம்.ஏ எக்ஸாம் இருந்தது. அதனால் பாட மறுத்துவிட்டேன். அதை கேட்ட ராஜா சார், எக்ஸாம் அப்புறம் கூட எழுதிக்கலாம். அதை விட பெரிதாக இங்கு கிடைக்கப்போகிறது என்று சொன்னார்.
அதன்பிறகு கே.எஸ்.சித்ராவின் அப்பா அவரது அம்மாவிடம் போன் செய்து இந்த படத்தில் இன்னொரு பாடலையும் பாடிவிட்டு வருகிறோம் என்று கூறியுள்ளார். அதற்கு அவர் மறுக்கவே, சித்ராவின் அப்பாவே அவரை பேசி சம்மதிக்க வைத்துள்ளார். அதன்பிறகு இந்த படத்தில் இன்னொரு பாடலையும் சித்ரா பாடியுள்ளார். அந்த பாடல் தான் ‘’பாடறியேன் படிப்பறியேன் என்ற பாடல். இந்த இரண்டு பாட்ல்களுமே சிந்து பைரவி படத்தில் முக்கிய பாடல்களாக அமைந்தது.
இந்த பாடல்களை பாடிய கே.எஸ்.சித்ரா அதன்பிறகு பல மொழிகளில் பாடியதும், தாமதாக தனது எக்ஸாம்சை எழுதி முடித்ததும் குறிப்பிடத்தக்கது. சித்ராவின் பாடகி வாழ்க்கையை உயர்த்தும் எண்ணத்தில் இளையராஜா அவரை எக்ஸாம் எழுத விடாமல் தடுத்துள்ளார் என்று சொல்லலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“