க்ளாசிக் சினிமாவில் முன்னணி பாடகிகளில் ஒருவராக திகழ்ந்த பி.சுசீலா, பல முன்னணி நடிகைகளுக்கும் தனது இனிமையான குரலின் மூலம் வெற்றியை கொடுத்துள்ளார். எம்.ஜி.ஆர், சிவாஜி, முத்துராமன், ஜெமினி கணேசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் பாடல்களை பாடியுள்ள பி.சுசீலா இன்றும் அவரது பாடல்களை ரசிக்க தனி ரசிகர்கள் பட்டாளத்தை ஏற்படுத்தி வைத்துள்ளார் என்று சொல்லலாம்.
தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், உள்ளிட்ட பல மொழிகளில் பல ஹிட் பாடல்களை பாடியுள்ள பி.சுசீலா பல முன்னணி இசையமைப்பாளருகளின் இசையில் ஹிட் பாடல்கள கொடுத்துள்ளார். சினிமாவில் பாடகியாக உச்சத்தில் இருந்த பி.சுசீலா பாடிய பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல், படமும் பெரிய வெற்றியை பெற்றிருந்தது.
இதன் காரணமாக அப்போது முன்னணி நடிகைகளாக இருந்த சாவித்ரி, பத்மினி, சரோஜா தேவி உள்ளிட்ட நடிகைகள் தங்களுக்கு பி.சுசீலா தான் குரல் கொடுக்க வேண்டும் என்று விரும்பியுள்ளனர். இதை மனதில் வைத்துக்கொண்டு பி.சுசீலா தனது சம்பளத்தை கொஞ்சம் உயர்த்தினார். இது சாரணமாக நடிக்கும் ஒரு விஷயம் தான் என்றாலும் கூட புதுமை இயக்குனரான ஸ்ரீதர் அப்போது தயாரிப்பாளராகவும் இருந்ததால், இதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
பி.சுசீலா மட்டும் தான் பாடுகிறாரா? ஏன் எஸ்.ஜானகி பாடவில்லையா என்று கேட்டு தனது அடுத்த படத்தில் அவரை கமிட் செய்துள்ளார். தனது இயக்கத்தில் 1962-ம் ஆண்டு வெளியான சுமைதாங்கி படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களையும் எஸ்.ஜானகிதான் பாட வேண்டும் அவரை வைத்து தான் பாடல் பதிவு செய்ய வேண்டும் என்று இசைமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநதனிடம் கூறியுள்ளார். ஸ்ரீதர். எம்.எஸ்.வியும் அப்படியே செய்துள்ளார்.
ஜெமினி கணேசன், தேவிகா, முத்துராமன் ஆகியோர் நடிப்பில் வெளியான சுமைதாங்கி படத்தில் 8 பாடல்கள் இடம்பெற்றிருந்த நிலையில், இதில் பெண் குரலில் வரும் 5 பாடல்களையும் எஸ்.ஜானகியே பாடியிருந்தார். குறிப்பாக மாம்பழத்து வண்டு, ராதைக்கேற்ற கண்ணன் உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. பி.சுசீலா தனது சம்பளத்தை ஏற்றியதால், எஸ்.ஜானகிக்கு வாய்ப்புகள் குவிந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“