தமிழ் சினிமாவில் நடிப்பு பல்கலைகழகம் என்று அழைக்கப்பட்ட சிவாஜி கணேசன், கண்ணதாசன் தன்னை கடுமையாக விமர்சித்ததை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில், அவரை அடிக்க, ஸ்டூடியோ முழுவதும் சுற்றி துரத்தியுள்ளார். அதன்பிறகு சில ஆண்டுகள் இருவரும் இணையாத நிலையில், அடுத்து பாகபிரிவினை படத்தில் இருவரும் இணைந்தனர். அதன்பிறகு என்ன நடந்தது தெரியுமா?
க்ளாசிக் தமிழ் சினிமாவில், தனது பாடல்கள் மூலம் பலரையும் கவர்ந்த கவியரசர் கண்ணதாசன் சர்ச்சைக்கும் பஞ்சம் இல்லாதவர் என்றாலும், தன் மனதில் பட்டதை எப்போதும் வெளிப்படையாக பேசும் நபர். அப்படி ஒருமுறை சிவாஜியை பற்றி ஒரு கருத்து சொல்ல, இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு அதன்பிறகு சிவாஜி படங்களுக்கு கண்ணதாசன் பாடல் எழுத முடியாமல் போகிறது. இதற்கு முக்கிய காரணம் என்ன என்று பார்க்கலாம்.
திராவிட முன்னேற்ற கழகத்தில் இருந்த சிவாஜி கணேசன், திருப்பதி கோவிலுக்கு சென்றது கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், கண்ணதாசன் இது குறித்து தனது பத்தரிக்கையில், தென்னாலிராமன் படத்தில் உடல் முழுவதும் மண்ணில் புதைந்து தலை மட்டும் வெளியில் தெரியும் காட்சியின் போட்டோவை வைத்து, இனி கட்சியில் சிவாஜியின் நிலை இதுதான் என்று எழுதியிருந்தார். இதை பார்த்து கோப்பட்ட சிவாஜி, கண்ணதாசனை அடிக்க போக என்.எஸ்.கிருஷ்ணன் சமாதானம் செய்து வைத்துள்ளார்.
அதன்பிறகு சில ஆண்டுகள் இருவரும் பாடல் எழுதாத நிலையில், பீம் சிங் இயக்கத்தில் வெளியான பாகபிரிவினை படத்தில் கவிஞர் கட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பாடல்கள் எழுதியுள்ளார். அந்த படத்தில் ஒரு தாலாட்டு பாடல் வேண்டும் என்பதற்காக பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்திடம், இயக்குனர் பீம்சிங் அவசரப்படுத்திய நிலையில், நீங்கள் அவசரப்படுத்தினால் என்னால் பாடல் எழுத முடியாது. இதுவோ தாலாட்டு பாடல். இதை என்னை விட கண்ணதாசன் தான் சரியாக எழுதுவார் நீங்கள் அவரிடம் கேளுங்கள் என்று கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து படக்குழு கண்ணதாசனிடம் கேட்டபோது, அவர் பாடல் எழுத மறுத்துள்ளார். இது குறித்து பஞ்சு அருணாச்சலம் கேட்டபோது, சிவாஜிக்கும் நமக்கும் மோதல் இருக்கிறது. நாம் பாடல் எழுதி, நீங்கள் ஏன் கண்ணதாசனிடம் பாடல் கேட்டீர்கள் என்று சிவாஜி சத்தம்போட்டு பாடல் படத்தில் இல்லாமல் செய்துவிட்டால் நமக்குதான் அசிங்கம் என்று கூறியுள்ளார். படக்குழு சிவாஜிக்கு தெரியாமல் நம்மிடம் வந்திருக்க மாட்டார்கள். அப்படியே சிவாஜி பாடல் வேண்டாம் என்று சொன்னால், அது நமக்கு மட்டுமல்ல இயக்குனர் தயாரிப்பாளர் எல்லோருக்கும் தான் அசிங்கம் என்று பஞ்சு அருணாச்சலம் கூறியுள்ளார்.
அதன்பிறகு கண்ணதாசன் பாகபிரினை படத்தில் 3 பாடல்களை எழுதி ஹிட் கொடுத்துள்ளார். இந்த படம் வெளியாகும் முன்பே பட்டுக்கோட்டை இறந்துவிட, அடுத்து வெளியான பாசமலர் படத்தில் அனைத்து பாடல்களையும் கண்ணதாசன் எழுதியுள்ளார். இந்த பாடல்களை ஒருநாள் இரவில் கேட்ட சிவாஜி, உடனடியாக கண்ணதாசனை பார்க்க வேண்டும் என்று கூறி அவரது வீட்டுக்கு வண்டி அனுப்பியுள்ளார். அந்த வண்டியில் ஏறி கண்ணதாசன் சிவாஜி வீட்டுக்கு வந்துள்ளார்.
கண்ணதாசன் தன்னை நோக்கி வருவதை பார்த்த சிவாஜி தனது இருக்கையில் இருந்து எழுந்து, வாடா நீ சரஸ்வதிடா என்று புகழ்ந்து நான் தெரியாமல் அன்று அப்படி செய்துவிட்டேன் என்று சொல்ல, கண்ணதாசனும் மன்னிப்பு கேட்டுள்ளார். அதை கேட்ட சிவாஜி, அதை விடுடா இனிமேல் என் படத்திற்கு நீதான் பாட்டு என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“பொ