தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் என்று பெயரேடுத்துள்ள சிவாஜி கணேசன் ஒரு இயக்குனருக்கு தனது நடிப்பு திருப்தி இல்லாததால், கால்ஷீட் முடிந்தும் அடுத்த நாள் காலையிலேயே வந்து நடித்து கொடுத்துள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்றால் இயக்குனர் திலகம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். இவர்கள் இருவரும் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளனர். அந்த வகையில், கடந்த 1967-ம் ஆண்டு வெளியான படம் தான் பேசும் தெய்வம். சிவாஜி கணேசன், பத்மினி, சவுக்கார் ஜானகி, நாகேஷ் உள்ளிட்ட பல முன்னணி நடச்த்திரங்கள் இந்த படத்தில் நடித்திருந்தனர்.
கே.வி.மகாதேவன் இசையமைத்த இந்த படத்திற்கு, கவிஞர் வாலி அனைத்து பாடல்களையும் எழுதியிருந்தார். டி.எம்.சௌந்திரராஜன், பி.சுசீலா, எஸ்.ஜானகி உள்ளிட்டோர் இந்த படத்திற்கான பாடல்களை பாடியிருந்தனர். இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், பத்மினியின் நடிப்பை பலமுறை பாராட்டிய இயக்குனர் கே.எஸ்.கோபால கிருஷ்ணன், சிவாஜியின் நடிப்பை ஒருமுறை கூட பாராட்டவில்லையாம்.
கடைசி நாள் படப்பிடிப்பின்போது, உங்களிடம் வந்து கேள்வி கேட்பார்கள், அந்த கேள்விக்கு உங்களால் பதில் சொல்ல முடியவில்லை. இதை எப்படி செய்ய வேண்டுமோ உங்கள் ஸ்டைலில் செய்துவிடுங்கள் என்று இயக்குனர் கூறியுள்ளார். அதன்பிறகு படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், சிவாஜி தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், ஷாட் ஓகே என்று கூறியுள்ளார். ஆனாலும் சிவாஜி மீண்டும் ஒருமுறை நடிப்பதாக கூறியுள்ளார்.
அதை கேட்டு இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனும் சரி என்று சொல்ல, 2-வது முறையும் சிவாஜி நடிக்க, இயக்குனர் ஷாட் ஓகே என்று கூறியுள்ளார். அதன்பிறகு அங்கு யாரிடமும் சொல்லாமல் சிவாஜி அங்கிருந்து கிளம்பியுள்ளார். படத்தின் தயாரிப்பாளர் என்ன சொன்ன அவரிடம் அவர் ஏன் சொல்லாமல் போகிறார்? இன்றுடன் கடைசி, நாளையில் இருந்து அவர் வேறு படத்திற்கு போகிறார். எல்லாம் ஷூட் பண்ணிட்டியா என்று கேட்டுள்ளார்.
விட்டுக்கு போன, சிவாஜி இரவு 11.30 மணிக்கு போன் செய்து காலை 7.30 மணிக்கு ஷூட்டிங் வைங்க நான் வந்து நடித்துவிட்டு அடுத்த படத்திற்கு போகிறேன் என்று சொல்ல, காலையில் இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் வருவதற்கு முன்பே சிவாஜி வந்து நடித்துள்ளார். அந்த நடிப்பை பார்த்த இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் சிவாஜியை இறுக்கி கட்டிபிடித்துக்கொண்டுள்ளார்.
இதை நேற்றே செய்ய வேண்டியதானே, உனக்காக நான் நைட் முழுவதும் கண்ணாடி முன்பு நடித்து பார்த்துவிட்டு அதையே இங்கு வந்து செய்திருக்கிறேன். என்னை உன்னால் பாராட்ட முடியவில்லை என்று சொல்லமாக சிவாஜி கோபித்துக்கொண்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“