தமிழ் சினிமாவில் நடிப்பு பல்கலைகழகம் என்று பெயரேடுத்த சிவாஜி கணேசன் நடித்த படத்தில் அவருடன் இணைந்து நடித்த நடிகர் சிவக்குமாரின் பாடல் காட்சி நீக்கப்பட்டது பலரும் அறியாத ஒரு தகவல்.
1968-ம் ஆண்டு ஏவிம் நிறுவனம் தயாரிப்பில் வெளியான படம் உயர்ந்த மனிதன். சிவாஜஜ, வாணிஸ்ரீ, சிவக்குமார், பாரதி, சௌகார் ஜானகி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு, எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். படத்தின் அத்தனை பாடல்கையும் கவிஞர் வாலி எழுதியிருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில, பாடல்கள் பெரிய ஹிட் அடித்தது.
வாணிஸ்ரீயை காதலித்த பெரும் பணக்காரரான சிவாஜி கணேசன் சந்தர்ப்ப சூழ்நிலையால், சௌகார் ஜானகியை திருமணம் செய்துகொள்வார். இதனால் வாணிஸ்ரீயை ஏமாற்றிவிட்டோமே என்ற குற்ற உணர்ச்சியில் இருக்கும், சிவாஜியிடம் வேலைக்கு வருபவர் தான் சிவக்குமார். வாணிஸ்ரீயின் மகனாக இவர், சிவாஜியின் மகனும் கூட. ஆனால் இவர் தனது மகன் என்று தெரியவில்லை என்றாலும், மகன் போல் அதிக பாசம் காட்டுவார் சிவாஜி.
படத்தில் படிப்பறிவு இல்லாத சிவக்குமார் நடிகை பாரதியை காதலிப்பார். அவரும் இவரை காதலிப்பார். அப்போது வளர்ந்து வரும் நடிகராக இருந்த சிவக்குமாரை முன்னுக்கு கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்துடன், ஏவிஎம் நிறுவனம் சிவக்குமார் – பாரதி ஜோடிக்கு ஒரு பாடல் வைத்திருப்பார்கள். சிவக்குமார் வாழ்க்கையில் வெளிச்சத்தை ஏற்படுத்தும் வகையில் ஏ.வி.எம்.நிறுவனம் இந்த பாடலை வெளியிப்புற படப்பிடிப்பு நடத்தியுள்ளனர்.
படப்பிடிப்பு முடிந்து பாடலை பார்த்த, ஏ.வி.எம் நிறுவனத்தின் மெய்யப்ப செட்டியார், பாடல் வேண்டாம் என்று கூறியுள்ளார். சிவக்குமார் வாழ்க்கைக்கு முன்னேற்றம் தர அவரே எடுக்க சொன்ன இந்த பாடலை அவரே வேண்டாம் என்று சொல்ல காரணம் என்ன என்று கேட்டுள்ளனர். இந்த படத்தில் சிவக்குமார் படிக்காதவர். பாரதி படித்தவர். பாடலின் இடையில் சிவக்குமார் அவரை தொடுவது போன்ற காட்சிகள் இருக்கிறது.
என்னதான் காதலாக இருந்தாலும், படிக்காத ஒருவன் படித்த பெண்னை காதலிக்கும்போது அவளை தொடுவதில் சற்று தயக்கம் இருக்கும். அதனால் இந்த பாடல் வேண்டாம். மீண்டும் படப்பிடிப்பு நடத்துங்கள் என்று கூறியுள்ளார். அதன்பிறகு இந்த பாடல் காட்சியை மீண்டும் படமாக்க திட்டமிட்ட படக்குழு வெளிப்புற படப்பிடிப்பு சாத்தியமில்லை என்பதால், ஸ்டூடியோவில் செட் அமைத்து இந்த பாடல் காட்சியை மீண்டும் படமாக்கியுள்ளனர்.
அந்த பாடல் தான் ‘’என் கேள்விக்கு என்ன பதில்’’ என்ற பாடல். டி.எம்.சௌந்திரராஜன், பி.சுசிலா பாடிய இந்த பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளனது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“