Advertisment

திரையில் மோதிய சிவாஜி - எஸ்.எஸ்.ஆர்... தியேட்டரில் நடந்த கத்தி குத்து சம்பவம் : அப்போவே ரசிகர்கள் இப்படியா?

சிவாஜியுடன் ஒரு சில படங்களில் இணைந்து நடித்திருந்தவர் எஸ்.எஸ்.ராஜேந்திரன். லட்சிய நடிகர் என்று போற்றப்படும் எஸ்.எஸ்.ஆர் தூய தமிழில் பேசி நடிக்கும் முக்கிய நடிகராக இருந்தார்.

author-image
WebDesk
New Update
Sivaji SS Rajendran

சிவாஜி - எஸ்.எஸ்.ராஜேந்திரன்

க்ளாசிக் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று நடிகர் திலகம் என்று பெயரேடுத்தவர் சிவாஜி கணேசன். அதேபோல் மக்கள் திலகம் என்று போற்றப்படும் எம்.ஜி.ஆர் சிவாஜி இடையே திரையுலகில் பலமான போட்டி இருந்தது. இவர்களின் இருவரும் இணைந்து நடித்த கூண்டுக்கிளி திரைப்படம் அப்போது பல சர்ச்சைகளுக்கு வழி செய்திருந்தாலும் இன்றும் வரலாற்றில் அந்த படம் ஒரு முக்கிய இடத்தை பிடித்துள்ளனர்.

Advertisment

இந்த படம் வெளியானபோது தியேட்டரில் ஏற்பட்ட கலவரங்கள் காரணமாக அடுத்து எம்.ஜி.ஆர் சிவாஜி இருவரும் இணைந்து நடிக்கவே இல்லை. ஆனால் இருவருமே மற்ற நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளனர். அந்த வகையில் சிவாஜியுடன் ஒரு சில படங்களில் இணைந்து நடித்திருந்தவர் எஸ்.எஸ்.ராஜேந்திரன். லட்சிய நடிகர் என்று போற்றப்படும் எஸ்.எஸ்.ஆர் தூய தமிழில் பேசி நடிக்கும் முக்கிய நடிகராக இருந்தார்.

சிவாஜியின் அறிமுக படமாக பராசக்தி படம் தொடங்கி பச்சை விளக்கு, ஆலயமணி, கை கொடுத்த தெய்வம், தெய்வபிறவி உள்ளிட்ட பல படங்களில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். இதில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த தெய்வபிறவி படம் வெளியான சமயத்தில் தியேட்டர்களில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அன்றைய காலகக்ட்டத்தில் சிவாஜி எஸ்.எஸ்.ஆர் இருவருக்குமே சமமான ரசிகர்கள் கூட்டம் இருந்தது.

1960-ம் ஆண்டு கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் கதை திரைக்கதையில் கிஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் வெளியான படம் தான் தெய்வ பிறவி. சிவாஜி பத்மினி எஸ்.எஸ்.ஆர் ஆகியோர் போட்டி போட்டு நடித்த இந்த படத்திற்கு சுதர்சன் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் ஒரு கட்டத்தில் மாமன் மச்சான்களாக இருக்கும் சிவாஜி – எஸ்.எஸ்.ஆர் இருவருக்கும்  இடையே மோதல் ஏற்பட்டு இருவரும் மாறி மாறி அடித்துக்கொள்வார்கள்.

அப்போது இடையில் சிவாஜியின் மனைவியான தங்கம் எஸ்.எஸ்.ஆரை அடித்துவிடுவார். இந்த காட்சி திரையில் ஓடிக்கொண்டிருக்கும்போது அப்போது திரையரங்குகளில் படம் பார்த்துக்கொண்டிருந்த சிவாஜி மற்றும் எஸ்.எஸ்.ஆர் ரசிகர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதல் ஒரு கட்டத்தில் கத்திக்குத்து சம்பவம் வரை சென்றுள்ளது. ரசிகர்களின் இந்த மோதலை அடக்குவதற்கே பெரும் பாடாக அமைந்தது. இது உண்மையிலேயே மிகவும் சங்கடமான ஒரு தருணம் என்று ஏ.வி.எம்.நிறுவனத்தின் சரவணன் கூறியுள்ளதாக விளரி என்ற யூடியூப் சேனலில் வெளியான வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Sivaji Ganesan Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment