தமிழ் சினிமாவில் நடிப்பு பல்கலைகழகம் என்று பெயரேடுத்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நடிப்புக்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவர் என்றாலும், கூட, திட்ட வேண்டிய ஒரு காட்சியில், காமெடி நடிகர் சந்திரபாபுவிடம் அறை வாங்கியுள்ளார் சிவாஜி. அதன்பிறகு என்ன நடந்தது தெரியுமா?
1958-ம் ஆண்டு பி.ஆர்,பந்தலு இயக்கத்தில் வெளியான படம் சபாஷ் மீனா. சிவாஜி கணேசன், பி.ஆர்,பந்தலு, சரோஜா தேவி, மாலினி, சந்திரபாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு, டி.ஆர்.லிங்கப்பா இசையமைத்திருந்தார். கு.மா.பாலசுப்பிரமணியம் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். காமெடி கதையம்சம் கொண்ட இந்த படம் தமிழ் சினிமாவில் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
அதேபோல் சந்திரபாபுவின் நடிப்பும் பாராட்டுக்களை பெற்றிருந்தது. பணக்காரரான மோகன் (சிவாஜி) பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதற்காக அவரது அப்பா, தனது நண்பரின் வீட்டுக்கு அனுப்பிவிடுவார். ஆனால் மோகன் தனக்கு பதிலாக தனது நண்பன் சேகர் (சந்திரபாபு) அனுப்பி வைப்பார். அந்த வீ்ட்டுக்கு சென்ற சேகர் அந்த வீட்டு பெண்ணை காதலிக்கும் நிலையில், மோகன், வேறொரு பெண்னை காதலிக்கிறார்.
இதன்பிறகு என்ன நடந்தது இவர்கள் எப்படி ஒன்று சேர்ந்தார்கள் என்பது தான் திரைக்கதை. இந்த படத்தின் ஒரு காட்சியில், சந்திரபாபு – சிவாஜி இடையே வாக்குவாதம் ஏற்படும். இதில் சந்திபாபு சிவாஜியை கண்டபடி திட்ட வேண்டும். இயக்குனர் இந்த காட்சியை விளக்கி சொல்லிவிட்டு படப்பிடிப்புக்கு தயாரான நிலையில், படப்பிடிப்பு தொடங்கி நடக்கிறது. அப்போது அந்த காட்சியில் சிவாஜியை திட்டுவதற்கு பதிலாக திடீரென சந்திரபாபு பளார் என அறைந்துவிடுகிறார். இதில் சிவாஜிக்கு உதட்டில் அடிப்பட்டு ரத்தம் வந்துவிடுகிறது.
உடனடியாக படப்பிடிப்பை நிறுத்திய இயக்குனர் பி.ஆர்,பந்தலு, திட்ட வேண்டிய காட்சியில் எதற்காக அறைந்தாய் என்று கேட்க, ஒரு எமோஷ்னலில் அறைந்துவிட்டேன் சார் என்று கூறியுள்ளார். ஆனால் அறை வாங்கி ரத்தம் வந்த சிவாஜி கணேசன் இது குறித்து எந்த கருத்தும் சொல்லாமல் அப்படியே இருந்துள்ளார். இந்த தகவலை சந்திரபாபு சகோதரர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“