தமிழ் சினிமாவில் நடிப்பு பல்கலை கழகம் என்று அழைக்கப்பட்ட சிவாஜி கணேசனிடம் பாரத் அவார்டு பற்றி பேசிய நடிகர் ஒருவர் சராமாரியாக திட்டு வாங்கியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் முக்கியமானவர் டெல்லி கணேஷ். தற்போது ப டங்களில் நடிக்கவில்லை என்றாலும், அவரின் காமெடி மற்றும் குணச்சித்திர நடிப்பு இப்போது பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. நாடக நடிகராக இருந்து 1976-ம் ஆண்டு வெளியான பட்டின பிரவேசம் என்ற படத்தின் மூலம் அறிமுகமான டெல்லி கணேஷ், ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவாஜி கணேசன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.
முதல்முறையாக இவர் நடிகர் சிவாஜி கணேசனுடன் நடித்தபோது, இவரை பிடிக்காததால், இவர் பேசும் வசனங்கள் அனைத்தையும் ஒரு ஜூனியர் ஆர்டிஸ்ட்டுக்கு கொடுத்துள்ளார் சிவாஜி. இது பற்றி இயக்குனர் யோனந்திடம் கேட்டபோது, அவரும் இவரை உதாசிகப்படுத்தும் வகையில் பேசியுள்ளார். ஆனாலும் இதை தாங்கிக்கொண்டு டெல்லி கணேஷ் அந்த படத்தில் நடித்துள்ளார். அதன்பிறகு பரிட்சைக்கு நேரமாச்சு என்ற படத்தில் நடித்தபோது சிவாஜியின் வாழ்க்கை வராலற்றை டிவியில் பார்த்துள்ளார் டெல்லி கணேஷ்.
மறுநாள் சிவாஜியிடம் சென்று, அவரின் காலில் விழுந்து அது பற்றி கூறியுள்ளார். இதை கேட்ட சிவாஜிக்கு டெல்லி கணேஷை் பிடித்துப்போக, அவருடன் நெருக்கமாக பழகியுள்ளார். அதன்பிறகு பிரபுவுடன் இவர் நடித்த ஒரு படத்தை பார்த்த சிவாஜி, நல்லாருக்கு சூப்பரா நடிச்சிருக்கான் என்று சொல்ல, இது டெல்லி கணேஷ் காதுக்கு சென்றுள்ளது. அடுத்து என் ஆசை ராசாவே ஷூட்டிங்கில் சிவாஜியை சந்தித்த டெல்லி கணேசன், அவருக்கு நன்றி சொல்ல, சிவாஜி மீண்டும் அவரை பாராட்டியுள்ளார்.
இந்த பாராட்டுக்களை கேட்ட டெல்லி நன்றி என்ற வார்த்தையோடு நிறுத்திக்கொள்ளாமல், நீங்கள் சொன்னது எனக்கு பாரத் விருது கொடுத்த போலவே இருக்கிறது. என்று கூறியுள்ளார். அந்த காலக்கட்டத்தில், சிவாஜிக்கு பாரத் விருது கொடுக்காமல் எம்.ஜி.ஆருக்கு கொடுத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் எம்.ஜி.ஆர் தனக்கு இந்த விருது வேண்டாம் என்று கூறியிருந்த நிலையில், டெல்லி கணேஷ் பாரத் என்று சொன்னதும் சிவாஜிக்கு கோபம் வந்துள்ளது.
டேய் என்ன பாரத் அவார்டு... நான்தான் சொல்றேனே அப்புறம் என்ன உனக்கு என்று பேசியுள்ளார். இதனால் பயந்துபோன டெல்லி கணேஷ் அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“