தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் என்று அழைக்கப்பட்ட சிவாஜி கணேசன், பாக்யராஜூவை பழிவாங்க வேண்டும் என்று நோக்கத்துடன், படப்பிடிப்பு தளத்தில் செய்த செயல் குறித்து பாக்யராஜ் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
1952-ம் ஆண்டு வெளியான பராசக்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான சிவாஜி கணேசன் அதனைத் தொடர்ந்து பல வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி ஹீரோவாக தன்னை நிலை நிறுத்திக்கொண்டார். நடிப்புக்கு முக்கியத்துவம் அளித்து எந்த கேரக்டராக இருந்தாலும், அதற்காக தன்னையே மாற்றிக்கொள்ளும் நடிகராக அறியப்பட்ட சிவாஜி கணேசன், பல முன்னணி இயக்குனர்களில் இயக்கத்தில் வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.
ஹீரோவாக நடித்து வந்த சிவாஜி கணேசன், ஒரு கட்டத்தில் மற்ற நடிகர்களின் படங்களில் முக்கிய கேரக்டரில் நடிக்க தொடங்கினார். அந்த வகையில் உருவான படம் தான் தாவணி கனவுகள். 1982-ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் முன்னாள் ராணுவ அதிகாரி சைக்கிள் கடை நடத்தும் கேப்டன் என்ற கேரக்டரில் சிவாஜி கணேசன் நடித்திருந்தார். இந்த படத்தில் நாயகனாக நடித்த பாக்யராஜ், படத்தை இயக்கி தயாரித்திருந்தார், இயக்குனர் பாரதிராஜா ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.
பொதுவாக தனது படங்களின் படப்பிடிப்புக்கு சரியான நேரத்திற்கு முன்னதாகவே வந்துவிடும் சிவாஜி கணேசன், இந்த படத்தின் ஷூட்டிங்கிலும் இயக்குனர் பாக்யராஜ் சொன்ன நேரத்திற்கு வந்துள்ளார். அப்படி ஒருநாள், பாக்யராஜ் சொன்ன நேரத்தில் சிவாஜி கணேசன் வந்துவிட்ட நிலையில், பாக்யராஜ் அவருக்கு முதல் ஷாட் வைக்காமல், மற்ற நடிகர்களின் ஷாட்களை எடுக்க புறப்பட்டுள்ளார். அப்போது அவரை அழைத்த சிவாஜி, என்னை எத்தனை மணிக்கு வர சொன்ன என்று கேட்க, 7 மணிக்கு என்று பாக்யராஜ் கூறியுள்ளார்.
இப்போ மணி என்ன ஆகுது என்று கேட்க, இன்னும் 3 நிமிடங்கள் இருக்கிறது என்று பாக்யராஜ் சொல்ல, என்னை வர சொல்லிட்டா எனக்கு தானே ஃபர்ஸ்ட் ஷாட் வைக்க வேண்டும் ஆனால் நீ வேற ஒருத்தருக்கு ஷாட் வைக்க போற, இப்போ சுத்தி இருக்கவங்க என்ன நினைப்பாங்க, நான் தாமதமாக வந்துவிட்டேன் என்று தானே நினைப்பார்கள் எனக்கு கெட்டபெயர் வாங்கி கொடுக்க வேண்டும் என்றே இப்பா பண்ணியா? நீ என்னை வர சொன்னால் என்னை வைத்து தானே எடுக்கனும்? என்று கேட்டுள்ளார்.
அதேபோல் அடுத்த நாள் எத்தனை மணிக்கு வர வேண்டும் என்று சிவாஜி கேட்க, 7.30க்கு வாங்க என்று பாக்யாராஜ் கூறியுள்ளார். ஆனால் அடுத்த நாள் 7.20 மணிக்கே வந்த சிவாஜி ஷூட்டிங் ஸ்பாட்டில் பேப்பர் படித்துக்கொண்டு இருந்துள்ளார். சிவாஜி முன்பே வந்துவிட்டார் என்று தெரிந்து பாக்யாராஜ் அவசரமாக வந்துள்ளார். வந்தவுடன் அண்ணே வணக்கம் என்னனே 7.20 கே வந்துட்டீங்க என்று பாக்யராஜ் கேட்டுள்ளார்.
உன்னை நான் பழி தீர்த்துக்கொண்டேன் என்று சிவாஜி கூறியுள்ளார். நேற்று 2000 பேர் இருந்தப்போ நான் லேட்டா வந்தது போன்று இருந்தது. அதனால் இன்னைக்கு முன்பே வந்து அண்ணனே முன்னாடி வந்து உட்கார்ந்திருக்கிறார். இந்த பாக்யராஜூவை இன்னும் காணோமே என்று யோசிப்பார்கள் என்று சிவாஜி கூறியுள்ளார். இந்த தகவலை பாக்யராஜ் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.