தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் என்று அழைக்கப்படும் சிவாஜி கணேசன், நடிப்புக்கு இலக்கணம் என்று சொல்ல இந்த ஒரு காட்சி போதும் என்று நவராத்திரி படத்தில் இடம் பெற்ற ஒரு காட்சியை பிரபலம் ஒருவர் கூறியுள்ளார்.
Advertisment
நாடக நடிகராக இருந்து தமிழ் சினிமாவில் பராசக்தி படத்தின் மூலம் அறிமுகமானவர் சிவாஜி கணேசன். 1952-ம் ஆண்டு கருணாநிதி கதை வசனத்தில் வெளியான பராசக்தி படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், சிவாஜிக்கு முதல் படத்திலேயே பெரிய பாராட்டுக்களும் கிடைத்தது. அதன்பிறகு முன்னணி இயக்குனர்கள் பலருடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார் சிவாஜி.
ஒரு சில படங்களில் வில்லனாகவும் நடித்துள்ள சிவாஜி கணேசன், நடிகர் திலகம், நடிப்பு பல்கலைகழகம் என்று அழைக்கப்படுகிறார். பாலிவுட் நடிகர்கள் கூட சிவாஜி நடித்த படங்களை ரீமேக் செய்து நடிப்பதில் தயக்கம் காட்டியுள்ளனர். அந்த அளவிற்கு நடிப்பில் முத்திரை பதித்த சிவாஜி கணேசன் ஓவர் ஆக்டிங் செய்யக்கூடிய நடிகர் என்ற முத்திரையும் இருக்கிறது. ஆனால் அவரை பற்றி தெரிந்தவர்கள் இந்த விமாசனங்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
சிவாஜி நடிப்புக்கு இலக்கணம் நவராத்தி படத்தில் இடம்பெற்ற இந்த ஒரு காட்சி போதும் என்று ஆலங்குடி வெள்ளைச்சாமி தனது வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். 1964-ம் ஆண்டு ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் வெளியான படம் நவரத்திரி. முதலில் இந்த கதையை எழுதிய இயக்குனர் ஏ.பி.நகராஜன் அந்த கதையை தனது நண்பர்களிடம் காட்ட, அவர்களே கதையை படித்துவிட்டு, இந்த கதை வேலைக்கு ஆகாது சரியில்லை என்று கூறியுள்ளனர். இதை கேட்ட ஏ.பி.நாகராஜன், சிவாஜி இந்த கதையை தூக்கி நிறுத்துவார் என்று கூறி படப்பிடிப்பை தொடங்கியுள்ளார்.
Advertisment
Advertisement
சிவாஜி 9 வேடங்களில் நடித்திருந்த இந்த படத்தில், சாவித்ரி நாயகியாக நடித்திருந்தார். படத்தின் இறுதிக்கட்ட காட்சியில், சிவாஜி சாவித்ரி சந்திக்கும்போது இருவருக்கும், வசனமே இல்லாமல், பார்வையிலேயே நடித்திருப்பார்கள் இந்த காட்சியில் பின்னணி இசையும் இல்லாமல் சிவாஜி தனது நடிப்பு திறமையை சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பார். இந்த படமும் பெரிய வெற்றிப்படமாக அமைந்து ஏ.பி.நாகராஜனின் நம்பிக்கையை காப்பாற்றியது.
நடிகர் திலகம், நடிப்பு பல்கலைகழகம் என்று அழைக்கப்படும் சிவாஜி கணேசன் தனது நடிப்பு திறமையை பல படங்களில் வெளிப்படுத்தி இருந்தாலும், வசனமே இல்லாத இந்த காட்சி, அவரின் நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் முக்கிய காட்சி என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“