கவியரசர் கண்ணதாசன் தனக்கு தானே ஆறுதல் சொல்லிக்கொள்வது போல் எழுதிய ஒரு பாடலை அந்த படத்தில் நாயகனாக நடித்த நடிகர் திகலம் சிவாஜி கணேசன், கிண்டல் செய்துள்ளார். காமராஜருக்காக எடுத்த இந்த படம் கடைசியில் என்ன ஆனது தெரியுமா?
1967-ம் ஆண்டு தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சியை இழந்த நிலையில், திராவிட முன்னேற்றம் கழகம் ஆட்சியை கைப்பற்றியது. ஆனால் அடுத்த 2 வருடங்களில் 1969-ம் ஆண்டு முதல்வர் அண்ணா மறைந்ததை தொடர்ந்து கலைஞர் கருணாநிதி முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார். அப்போது தமிழ்நாட்டில் மதுவிலக்கை தளர்த்துவது தொடர்பாக சட்டம் இயற்ற, கருணாநிதி முடிவு செய்துள்ளார்.
இந்த காலக்கட்டத்தில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்பதால், மதுவிலக்குக்கு ஆதரவாக ஒரு படம் எடுக்க வேண்டும் என்று நினைத்து கண்ணதாசன், சிவாஜி, இயக்குனர் முக்தா சீனிவாசன், மதுரை திருமாறன் ஆகிய 4 பேரும் ஒரு கதை எழுதியுள்ளனர். இந்த படத்தில் சிவாஜி முத்துராமன் இணைந்து நடித்த நிலையில் லட்சுமி, சரோஜா தேவி, ஆகியோர் நாயகிகளாக நடித்திருந்தனர். கே.வி.மகாதேவன் இசையமைக்க, கண்ணதாசன் அனைத்து பாடல்களையும் எழுதியிருந்தார்.
முக்தா சீனிவாசன் இயக்கிய இந்த படத்தில், முத்துராமன் பணக்காரனாக இருந்து குடிகாரனாக இருப்பார். அவரது அலுவலகத்தில் வேலை செய்யும் சிவாஜி, முத்துராமன் தங்கை சரோஜா தேவியை காதலிப்பார். அதேபோல் சிவாஜியின் தங்கை லட்சுமியை முத்துராமன் காதலிப்பார். ஆனால் அவர் குடிகாரனாக இருப்பதால், தனது தங்கையை எப்படி கொடுப்பது, அவரை திருத்த வேண்டும் என்று நினைக்கும் சிவாஜி, தான் குடித்தது போல் நடிப்பார். இதை பார்த்த முத்துராமன் திருந்திவிடுவார்.
அதே சமயம், சிவாஜி குடிகாரன் என்ற பட்டத்துடன் இருப்பார். தான் குடிக்கவில்லை என்று உண்மையை சொல்ல முடியாத சூழலில், அவர் பாடுவது போன்ற ஒரு பாடல் தான் ‘உலகம் ஆயிரம் சொல்லட்டுமே உனக்கு நீதான் நீதிபதி’ என்ற பாடல். இந்த பாடலை கண்ணதாசன் எழுதியிருந்த நிலையில், டி.எம்.சௌந்திரராஜன் பாடியிருப்பார். 1971-ம் ஆண்டு வெளியான அருணோதயம் என்ற இந்த படம் வெளியாகி சரியாக போகாத நிலையில், ஒரு நாள் இயக்குனர் முக்தா சீனிவாசனை சந்தித்துள்ளார் சிவாஜி.
அப்போது சீனு நீ குடிக்கமாட்ட, உங்க அண்ணன், முக்தா ராமசாமியும் குடிக்கமாட்டார். படத்தில் நடித்த சோ குடிக்கமாட்டான். ஆனால் படத்திற்கு கதை எழுதிய, மதுரை திருமாறன் குடிகரான், மற்றபடி எல்லாருமே குடிகரான் தான். குடிக்கிற எல்லாரும் சேர்ந்து குடிக்காதேனு படம் எடுத்த எப்படிடா ஓடும் என்று கிண்டல் செய்துள்ளார். அதேபோல் சின்ன அண்ணாமலை, காமராஜனரிடம் இது பற்றி சொல்ல, அவரும் தனது பங்குக்கு, இவர்கள் எடுத்த படம் வித்துச்சா என்று கேட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.