விசில் சத்தத்தில் தொடங்கி ரயிலின் சத்தம் முதல் இசையில் வித்தியாசம் காட்சி எம்.எஸ்.வியின் மெட்டுக்கு கண்ணதாசன் ஜாலியாக எழுதிய ஒரு பாடல் இன்றும் நிலைத்திருக்கும் ஒரு பாடலாக அமைந்துள்ளது.
Advertisment
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்க ’’ப’’ வரிசையில் ஹிட் படங்களை கொடுத்தவர் பீம்சிங். 1964-ம் ஆண்டு இவர்கள் கூட்டணியில் வெளியான படம் பச்சை விளக்கு. சிவாஜி, எஸ்.எஸ்.ரஜேந்திரன், நாகேஷ், சவுகார் ஜானகி, ஏ.வி.எம்.ராஜன் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த இந்த படத்திற்கு எம்.எஸ்.வி – ராமமூர்த்தி ஆகியோர் இசையமைப்ப கவியரசர் கண்ணதாசன் பாடல்களை எழுதியிருந்தார்.
சாரதி என்ற ரயில் இன்ஜின் டிரைவரான சிவாஜி கணேசன், தனது தம்பி மற்றும் தங்கைக்காக வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருப்பார். இவரது தங்கை படித்துக்கொண்டிருந்தபோது, சில தடைகளால் படிப்பை பாதியில் நிறுத்த வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அதன்பிறகு மீண்டும் படிப்பை தொடர அவருக்கு வாய்ப்பு கிடைக்கும்போது அதை நினைத்து சிவாஜி மகிழ்ச்சியில் பாடும் ஒரு பாடல்.
விசில் இசையுடன் தொடங்கும் இந்த பாடலை கண்ணதாசன் எழுதியிருப்பார். இந்த பாடல் தான் ‘’கேள்வி பிறந்தது அன்று, நல்ல பதில் கிடைத்தது இன்று’’ என்ற பாடல். தங்கை படிப்பை தொடரப்போகிறாள் என்ற மகிழ்ச்சியுடன் அண்ணன் பாடும் ஒரு பாடல் தான் இது என்றாலும் கூட இந்த பாடலில் ஒரு இடத்தில் கூட தங்கை என்ற வார்த்தையே வராமல் கண்ணதாசன் வித்தியாசமான கோணத்தில் பாடலை எழுதியிருப்பார்.
இந்த பாடலில் பொதுவுடைமை, உள்ளிட்ட மக்களுக்கு தேவையான பல கருத்துகள் அமைந்தது போன்று வரிகளை அமைத்திருப்பார். அதேபோல் இந்த பாடலில் நடனம் இல்லாமல், சிவாஜி கணேசனை வித்தியாசமான நடக்க வைத்தே பாடலை படமாக்கி இருப்பார் இயக்குனர் பீம்சிங். எம்.எஸ்.விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசையில் டி.எம்.சௌந்திரராஜன் பாடிய இந்த பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பறெ்று வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“