நடிகர் திகலம் சிவாஜிக்காக, பல ஹிட் பாடல்களை கொடுத்திருந்தாலும், தான் எதிர்பார்த்த மாதிரி ஒரு பாடலை கண்ணதாசன் கொடுக்காதபோது, தனது சட்டையை கிழித்துக்கொண்டு சத்தம்போட்டுள்ளார் சிவாஜி கணேசன். அது என்ன பாடல்? என்ன படம் என்பதை பார்ப்போம்.
Advertisment
தமிழ் சினிமாவில் நடிப்பு பல்கலைகழகம் என்று அழைக்கப்பட்டவர் சிவாஜி கணேசன். 1952-ம் ஆண்டு பராசக்தி படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாக இவர், அடுத்தத்து பல வெற்றிப்படங்களை கொடுத்த இவர், முன்னணி நடிகராக உயர்ந்து ஒரு கட்டத்தில் படங்களை தயாரிக்கவும் தொடங்கினார். அந்த வகையில் தனது சிவாஜி பிலிம்ஸ் மூலம் அவர் தயாரித்து நடித்த படம் புதிய பறவை.
சேஷ் அன்கா என்ற வங்காள மொழி திரைப்படத்தை தழுவி எடுக்கப்பட்ட இந்த படத்தை தாதா மிராசி என்ற இயக்குனர் இயக்கியிருந்தார். சவுக்கார் ஜானகி, சரோஜா தேவி நாயகிகளாக நடித்த இந்த படத்தில் எம்.ஆர்.ராதா முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்க, கவியரசர் கண்ணதாசன் அனைத்து பாடல்களையும் எழுதியிருந்தார். ரொமான்ஸ் த்ரில்லர் பாணியில் வெளியான இந்த படம் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.
இந்த படத்தில், பாடல்கள் பெரிய ஹிட் அடிக்க, சிவாஜி தான் முக்கிய காரணம் என்று சொல்லலாம். படத்தின் இயக்குனர் தாதா மிராசிக்கு, தமிழ் தெரியாது என்பதால், கட்சிகளை விளக்கி சொல்லும் பொறுப்பு சிவாஜிக்கு இருந்தது. அவரும் இசையமைப்பாளர் கவிஞர் ஆகிய இருவருக்கும் பாடல் தேவைக்கான காட்சியை விளக்கி கூறியிருந்தார். அந்த வகையில், கடந்த கதையின் முக்கிய கருவை அடிப்படையாக வைத்த ஒரு காட்சிளை விளக்கி, பாடலை கேட்கிறார் சிவாஜி.
Advertisment
Advertisements
சிவாஜி விளக்கிய காட்சிக்காக, கண்ணதாசன் பாடல்கள் எழுதி கொடுக்க, அவருக்கு அந்த பாடல்கள் திருப்தியா இல்லை. ஒரு கட்டத்தில், என்ன செய்வது என்று தெரியாத சிவாஜி கணேசன், இந்த பாடலில் நான் எப்படி நடிக்கப்போகிறேன் என்பது பற்றி நடித்து காட்டியுள்ளார். ஆனாலும் கண்ணதாசன் எழுதிய பாடல்கள் எதுவும் சிவாஜிக்கு திருப்தியை கொடுக்கவில்லை. அடுத்து என்ன செய்வது என்று தெரியாத சிவாஜி, குறுக்கும் நெடுக்கும் நடந்து, சுவற்றில் முட்டிக்கொண்டு, டென்ஷனில் சட்டையை கிழித்துக்கொண்டு, ஒரு வார்த்தையை கூறியுள்ளார்.
அந்த வார்த்தையை பிடித்துக்கொண்ட கண்ணதாசன், அதையே பாடலாக மாற்றியுள்ளார். அந்த பாடல் தான், எங்கே நிம்மதி என்ற பாடல். இந்த பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாடல் அதிக இசைக்கருவிகளை கொண்டு பதிவு செய்யப்பட்டது. துரை சரவணன் என்ற யுடியூப் சேனலில் இந்த பாடல் குறித்து பதிவு செய்யப்பட்டுள்ளது.