க்ளாசிக் சினிமாவில் நடிப்பில் முத்திரை பதித்து நடிகர் திகலமாக ஜொலித்தவர் சிவாஜி கணேசன். நாடக நடிகராக இருந்து 1952-ம் ஆண்டு வெளியான பராசக்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான சிவாஜி, தொடர்ந்து முன்னணி இயக்குனர்களின் இயக்கத்தில் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.
எந்த கேரக்டரில் நடித்தாலும் அந்த கேரக்டராகவே மாறிவிடும் சிவாஜி, தான் ஒவ்வொரு படம் நடிக்கும்போதும் தன்னை ஒரு அறிமுக நடிகராகவே நினைத்துக்கொண்டு நடிப்பதாக பல பேட்டிகளில் தெரிவித்துள்ளார். அந்த வகையில், பாக பிரிவினை படத்தில் ஒரு கை ஊனமுற்றவராகவும், பாசமலர் படத்தில் பாசத்தில் எல்லைகள் கடந்த சகோதரனாகவும், சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல், இந்திய சினிமாவில் சக நடிகர்களையே தனது நடிப்பால் வியப்பில் ஆழ்த்திய சிவாஜி கணேசன் டெக்னாலஜி வசதிகள் அவ்வளவாக இல்லாதக காலக்கட்டத்திலேயே ஒரே படத்தில் 9 வேடங்களில் நடித்து அசத்தியவர். 1964-ம் ஆண்டு வெளியான இந்த படத்தை ஏ.பி.நாகராஜன் இயக்கியிருந்தார். சாவித்ரி நாயகியாக நடித்த இந்த படத்தில் சிவாஜி 9 வேடங்களில் நடித்திருந்தார்.
ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த படத்தில் சிவாஜயின் நடிப்பு பலரின் பாராட்டுக்களை பெற்றிருந்தது. தமிழ் சினிமாவில் முதன் முதலில் 9 வேடங்களில் நடித்தவர் சிவாஜி தான் என்றாலும் அதற்கு முன்பே நாடகத்தில் 9 வேடங்களில் நடித்து அசத்தியவர் தான் சாமி ஐயர். சிவாஜி நாடகங்களில் நடித்து வந்த காலக்கட்டத்தில் நாடகம் இல்லாத சமயங்களில் மற்ற குழுவின் நாடகங்களை பார்க்க செல்வது வழக்கம்.
அந்த வகையில் சிவாஜி இருந்த நாடக குழு நாமக்கல்லில் இருந்தபோது நாடகம் இல்லாத ஒரு நாளில் தம்பாச்சாரி என்ற நாடகத்தை பார்க்க சிவாஜி உள்ளிட்ட நடிகர்களை அவரது நாடக குழு தலைவர் ராமசுப்பையா அழைத்து சென்றார். இந்த நாடகத்தில் சாமி ஐயர் என்பது 9 வேடங்களில் நடித்து அசத்தியிருந்தார். இந்த நாடகத்தை பார்த்து பிரமித்த சிவாஜி கணேசன் எதிர்காலத்தில் தானும் இதேபோன்று 9 வேடங்கில் நடிக்க வேண்டும் என்று நினைத்துள்ளார். அன்று நினைத்த சிவாஜி 1964-ம் ஆண்டு நவாரத்தி படத்தின் மூலம் தனது ஆசையை நிறைவேற்றிக்கொண்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“