Advertisment

சிவாஜிக்கு இன்ஸ்பிரேஷன் இந்த தமிழ் நடிகரா? சத்யராஜ் கேள்விக்கு மறைமுகமான பதில்

நீங்கள் நடித்த காலத்தில் எந்த நடிகரின் பாதிப்பு உங்களிடம் இருந்தது என்று சத்யராஜ் கேட்க, ஏன்டா நான் யாரை பார்த்து காப்பி அடிக்கிறேனு தெரிந்துகொள்ள வேண்டுமா என்று சிவாஜி கேட்டுள்ளார்

author-image
WebDesk
New Update
Sivaji Sathyaraj

நடிகர் திலகம் சிவாஜி - சத்யராஜ்

தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் என்ற அடைமொழியுடன் தனது வித்தியாசமான நடிப்பு திறமையை வெளிப்படுத்தி பலருக்கும் இன்ஸ்பிரேஷனாக இருப்பவர் சிவாஜி கணேசன். எந்த கேரக்டராக இருந்தாலும் அதில் தனது தனித்துவத்தை அமைத்து அந்த கேரக்டராகவே மாறி நடிக்கும் திறன் கொண்ட சிவாஜி கணேசனின் நடிப்பை இன்றைய இளம் தலைமுறை நடிகர்கள் பலரும் பின்பற்றி வருகின்றனர்.

Advertisment

எந்த ஒரு நடிகராக இருந்தாலும், அவருக்கென்று ஒரு நடிகர் இன்ஸ்பிரேஷன் இருப்பார். அந்த வகையில் அனைத்து கேரக்டர்களிலும் அசத்தும் திறன் கொண்ட சிவாஜி கணேசன் நடிக்கும்போது யாரை மனதில் நினைத்துக்கொள்வார்? அவரது இன்ஸ்பிரேஷன் யார் என்பதை அறிய நடிகர் சத்யராஜ் விரும்பியுள்ளார். ஒருமுறை சிவாஜி கணேசனுடன் நடித்த படத்தின் படப்பிடிப்பின்போது சத்யராஜ் அவரிடமே இந்த கேள்வியை கேட்டுள்ளார்.

நீங்கள் நடித்த காலத்தில் எந்த நடிகரின் பாதிப்பு உங்களிடம் இருந்தது என்று சத்யராஜ் கேட்க, ஏன்டா நான் யாரை பார்த்து காப்பி அடிக்கிறேனு தெரிந்துகொள்ள வேண்டுமா என்று கேட்ட சிவாஜிக்கு இல்லப்பா சும்மா தெரிந்துகொள்ளத்தான் கேட்டேன் என்று சத்யராஜ் கூறியுள்ளார். அதன்பிறகு பதில் கொடுத்த சிவாஜி, நான் எந்த ஹாலிவுட் நடிகரையும் காப்பி அடித்ததில்லை. எனக்கு பிடித்த ஒரே நடிகர் எம்.ஆர்.ராதா தான் என்று கூறியுள்ளார்.

மேலும், உங்களுக்கு எல்லாம் இரட்டை குரலில் சினிமாவில் பேசி நடிக்கும் எம்.ஆர்.ராதா பற்றி தான் தெரியும். அவர் நாடகத்தில் நடித்து நீங்கள் பார்த்தது இல்லை. நாடகத்தில் எம்.ஆர்.ராதா நடிக்கும்போது எந்த இங்கிலீஷ் நடிகரும் அவர் பக்கத்தில் நிற்க முடியாது என்று எம்.ஆர்.ராதாவுக்கு சிவாஜி பாராட்டு தெரிவித்துள்ளார். ஆனால் இதை நம்பாத சத்யராஜ், எம்.ஆர்.ராதா நாடக கம்பெனியில் சிவாஜி இருந்ததால் இப்படி சொல்வதாக நினைத்துள்ளார்,

ஆனால் மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லாலும் ஒரு பேட்டியில் உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்ற கேள்விக்கு எம்.ஆர்.ராதா என்று பதில் அளித்தை பார்த்து நான் அசந்துவிட்டேன் என்று நடிகர் சத்யராஜ் ஒரு பத்திரிக்கை பேட்டியில் கூறியதாக பத்திரி்கையாளரும் இயக்குனருமான சித்ரா லட்சுமணன் கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sivaji Ganesan Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment