கிராமத்தில் இருந்து சென்னை வந்த வெள்ளந்தி இளைஞர் செல்வம், கவிஞர் வைரமுத்து வீட்டில், உதவியாளராக இருந்து, அதன்பிறகு அவரால் கைவிட்டப்பட்ட, கவிஞர் சினேகன் ஒரு கட்டத்தில் வாலியின் அரவணைப்பில் வளர்ந்துள்ளார்.
1997-ம் ஆண்டு புத்தம்புது பூவே என்ற படத்தின் மூலம் பாடல் ஆசிரியராக அறிமுகமானவர் சினேகன். அவரது துரதிஷ்டவசமாக அந்த படம் வெளியாகவில்லை. அதன்பிறகு, 2000-ம் ஆண்டு தம்பி ராமையா இயக்கத்தில் வெளியான மனுநீதி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல வெற்றிப்படங்களுக்கு ஹிட் பாடல்களை கொடுத்தவர் தான் சினேகன்.
குறிப்பாக, பாண்டவர் பூமி, மௌனம் பேசியதே, ஏப்ரல் மாதத்தில், சொக்க தங்கம், சாமி, மன்மதன், கழுகு உள்ளிட்ட படங்களில் சேரன் எழுதிய பாடல்கள் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பாடல் ஆசிரியராக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த சினேகன், பிக்பாஸ் முதல் சீசனில், போட்டியாளராக பங்கேற்று இறுதிவரை பிக்பாஸ் வீட்டில் இருந்தார். இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் சினேகன் பிரபலமானார்.
யோகி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான சினேகன், கோமாளி, பூமி, உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்த சினேகன், கடைசியாக அருண்விஜய் நடிப்பில் வெளியான யானை படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். தற்போது திரைப்படங்களில் பாடல்கள் எழுதியிருந்தாலும், தொடக்க காலத்தில் கவிஞர் வைரமுத்துவின் வீட்டில் உதவியாளராக சினேகன் வேலை பார்த்துள்ளார். அப்போது எனக்கு கவிதையை ரசிக்கிறவன் தான் வேண்டும். எழுதுகிறவன் தேவையில்லை என்று வைரமுத்து அடிக்கடி கூறியுள்ளார்.
வைரமுத்துவின் இந்த வார்த்தையை கேட்ட சினேகன், தனக்கு கவிதை எழுத தெரியும் என்பதை மறைத்துள்ளார். ஆனாலும், வைரமுத்துவுக்கு தெரியாமல், தனது பெயர் செல்வம் என்பதை மாற்றி சினேகன் என்ற புனை பெயரில் கவிதை எழுதிய இவர், தனது கவிதை புத்தகத்தின் வெளியீட்டு விழாவிற்கு, வைரமுத்துவை அழைத்துள்ளார். ஆனால் 3 மாதங்கள் கழித்து தான் ஊரில் இருந்தால் வருகிறேன் என்று தனது உதவியாளரிடம் சொல்லி அனுப்பியுள்ளார் வைரமுத்து. இதனால் கோபமான சினேகன், இயக்குனர் கே.பாலச்சந்தர் மற்றும் இலக்கியவாதிகளை அழைத்து தனது கவிதை புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.
அதன்பிறகு சினிமாவில் பாடல் எழுத தொடங்கிய சினேகனுக்கு, பாண்டிவர் பூமி திரைப்படம் பெரிய அறிமுகத்தை கொடுத்தது. அதன்பிறகு சாமி படத்தில் இடம்பெற்ற ‘’கல்யாணம்தான் கட்டிக்கிட்டு’’ என்ற பாடல், சினேகனுக்கு இளைஞர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று தந்தது. அதே சமயம் இந்த பாடலுக்கு சர்ச்சைகளும் எழுந்ததால், அடுத்து என்ன செய்வது என்று சினேகன் யோசித்தபோது, அவருக்கு ஒரு போன் கால் வந்துள்ளது. மறுபக்கம் பேசிய கவிஞர் வாலி, பல்லவி பிரமாதமாக இருக்கிறது என்று பாராட்டியுள்ளார்.
மேலும், திட்டுவாங்கதான் ஆனால் திட்டுகிறவன் நமக்கு சோறு போடமாட்டான். அதனால் அதை பற்றி கவலைப்படாதே, தொடர்ந்து இதுபோன்ற பாடல்களை எழுது என்று கூறியுள்ளார். பெரிய கவிஞரிடம் இருந்து வாழ்த்து வந்ததை தொடர்ந்து சினேகன், அடுத்தடுத்து படங்களில் பாடல்கள் எழுதினார். அதன்பிறகு உயர்திரு 420 என்ற படத்தில் நடித்த சினேகன், முதல் பாடலை வாலிதான் எழுத வேண்டும் என்று கூறி அவரிடம் சென்றுள்ளார். அப்போது சினேகனுக்காக, பாதி சம்பளம் பெற்றுக்கொண்டு வாலி பாடல் எழுதி கொடுத்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“