Advertisment

தயங்கிய எஸ்.பி.பி... தாராளம் காட்டிய யேசுதாஸ்... இலங்கை வானொலியில் ஹிட்டடித்த தமிழ் பாடல்

கௌரி மனோஹரி படத்தில் ஒரு போட்டி பாடலுக்கான இசையை அமைத்த அவர், இதற்கு பாடல் எழுதும்படி கவிஞர் வைரமுத்துவிடம் கொடுக்கிறார்.

author-image
WebDesk
New Update
SBP Yesudas

எஸ்.பி.பாலசுப்பிரமணியன் - கே.ஜே.யேசுதாஸ்

தமிழ் சினிமாவில் 1992-ம் ஆண்டு வெளியாக கௌரி மனோஹரி என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இனியவன். இந்த படத்திற்காக கௌரி மனோகரி ராகத்திலேயே ஒரு பாடலுக்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தில் ஒரு போட்டி பாடலுக்கான இசையை அமைத்த அவர், இதற்கு பாடல் எழுதும்படி கவிஞர் வைரமுத்துவிடம் கொடுக்கிறார்.

Advertisment

இந்த படத்தில் இரு இசைக்கலைஞர்கள். இதில் ஒருவர் நான் தான் இசையின் எல்லாமே என்று சொல்லிக்கொள்பவர். மற்றொருவர், இந்த உலகம் பிறப்பதற்கு முன்பே இசை பிறந்துவிட்டது. இயற்கை தான் இசை என்று சொல்லக்கூடியவர். இவர்கள் இருவருக்கும் இடையில் நடக்கும் போட்டி தான் இந்த பாடல் என்று பாடல் வரும் சூழ்நிலை சொல்லப்பட்டுள்ளது.

அதேபோல் ஒரு படத்திற்கு பாடல் பாட வரும் பாடகர்கள் யார் ஹீரோ, ஹீரோயின் என்று கேட்டுக்கொண்டு பாடுவார்கள். ஏனென்றால் அப்போது தான் அவர்களுக்கு ஏற்றபடி பாட முடியும். ஆனால் வைரமுத்து இந்த சூழ்நிலையை கேட்டவுடன் மற்ற எந்த தகவல்களையும் கேட்காமல் உடனடியாக பாடல் எழுத தொடங்கியுள்ளார். பாடல் எழுதி கொடுத்த உடனே இந்த போட்டி பாடலை யார் பாடுவது என்று யோசித்துள்ளனர்.

அப்போது போட்டியாளர்கள் என்று கூறப்பட்ட எஸ்.பி.பாலசுப்பிரமணியன் கே.ஜே.யேசுதாஸ் ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த பாடலை இசையமைப்பாளர் இனியவன் எஸ்.பி.பியிடம் பாடி காட்ட அவருக்கு பாடல் மிகவும் பிடித்துப்போய்விடுகிறது. ஆனால் நான் பாட தயார், அண்ணன் யோசுதாஸ் இந்த பாடலை பாடுவாரா என்று கேட்டுக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

இதன்பிறகு இசையமைப்பாளர் இனியவன் யேசுதாஸை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பில் இந்த பாடல் முழுவதையும் இசையமைப்பாளர் இனியவன் யேசுதாஸ்க்கு பாடி காடட, அவருக்கும் பாடல் மிகவும் பிடித்துவிடுகிறது. அதன்பிறகு இந்த பாடல் பதிவு நடைபெறுகிறது. எஸ்.பி.பி. யேசுதாஸ் இருவரும் தனித்தனியாக வந்து பாடி கொடுத்துள்ளனர்.

இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இலங்கை வாணொலியில் அதிகம் கொண்டாடப்பட்ட தமிழ் பாடல்களில் ஒன்றாக இன்றும் நிலைத்திருக்கிறது. இந்த படம் வெளியான சுவடே தெரியவில்லை என்றாலும் கூட இந்த பாடல் மக்கள் மத்தியில் நிலைத்திருக்கிறது என்று சொல்லலாம். அதற்கு முக்கிய காரணம் தனக்கு இந்த பாடலில் பெரியதாக பாட வாய்ப்பு இல்லை என்றாலும் வாய்ப்பை தவறவிடாமல் பாடி கொடுத்த முன்னணி பாடகர் யேசுதாஸ் என்று சொல்லலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment