/indian-express-tamil/media/media_files/2024/11/21/xFvxsCOAecYUNwbTTtmW.jpg)
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக உச்சம் தொட்ட கவுண்டமணி, பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள நிலையில், சக காமெடி நடிகரான எஸ்.எஸ்.சந்திரனுடன் இணைந்து நடித்தபோது படப்பிடிப்பு தளத்தில் இருவருக்கும் இடையே அதிரடி சண்டை நடந்துள்ளது.
தமிழ் சினிமாவில் நாகேஷ் நடித்த காலத்தில் அறிமுகமாகி, காமெடியில் உச்சம் தொட்டவர் தான் கவுண்டமணி. இவர் தனியாக நடித்த படங்கள், கவுண்மணியுடன் இணைந்து நடித்த படங்கள் என பல வெற்றிப்படங்கள் இவரது காமெடியில உருவாகியுள்ளது. கவுண்மணி காமெடி மற்றும் நக்கல் நையாண்டிகளுக்கென இப்போதும் தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அந்த அளவிற்கு காமெடியில் கலக்கியவர் தான் கவுண்டமணி.
கரகாட்டக்காரன் படத்தில் கவுண்மணி – செந்தில் இடையேயான காமெடி காட்சிகள் இப்போதும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் கவுண்மணி நடித்த கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தவர் எஸ்.எஸ்.சந்திரன். ஆனால் படத்தில் நாயகன், ராமராஜன், இந்த கேரக்டரில் கவுண்டமணி தான் நடிக்க வேண்டும் என்று அடம் பிடித்து அவரை படத்தில் நடிக்க வைத்துள்ளார். அந்த அளவுக்கு இந்த படம் பெரிய வெற்றியை பெற்றிருந்துது.
இதனிடையே 1994-ம் ஆண்டு விஜயகாந்த் ரஞ்சிதா நடிப்பில் வெளியான பெரிய மருது படத்தில் கவுண்மணி மணி எஸ்.எஸ்.சந்திரன் இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்தில் ஒரு காட்சியில், கவுண்டணி சட்டை அணியாமல் தனது வீட்டில் இருக்கும்போது எஸ்.எஸ்.சந்திரன், தனது மகளை பார்க்க வருவார். அப்போது அவர் அம்மாடி மகாலட்சுமி என்று அழைக்க, எவனோ பிச்சைக்காரன் வந்திருக்கான் பாரு, இப்போல்லம் பிச்சைக்காரனுக்கு பேர் சொல்லி கூப்பிட ஆரம்பிச்சிட்டானுங்க என்று கவுண்டமணி சொல்வார்.
கவுண்டமணி சொன்ன வசனம் ஸ்கிரிப்டில் இருந்துள்ளது. ஆனால் சற்றும் எதிர்பாராத வகையில், எஸ்.எஸ்.சந்திரன், என்ன கரடி சட்டை போடாட உட்கார்ந்திருக்கு என்று ஸ்ரிப்ரில் இல்லாத ஒரு வசனத்தை பேசியுள்ளார். இதனால் கடுப்பான கவுண்டமணி ஸ்கிரிப்டில் என்ன இருக்கிறதோ அதை மட்டும் பேசு என்று கூறியுள்ளார். ஸ்கிரிப்டில் இருப்பதை மட்டும் பேசுவதற்கு நான் எதற்கு என்று எஸ்.எஸ்.சந்திரன் கேட்க இருவருக்கும் மோதல் ஏற்பட்டு படப்பிடிப்பில் அடிதடி சண்டை நடந்ததாக அந்த படத்தில் வேலை செய்த ஒருவர் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.