வாலிப கவிஞர் வாலி இப்படியும் பாடல் எழுதுவாரா என்று யோசிக்க வைக்கும் வகையில் பாடலை எழுதி அதை அனைவருக்கும் பிடிக்கும் வகையில் கொடுத்துள்ளதே தனி சிறப்பு. இந்த பாடல் என்ன எந்த படத்தில் வருகிறது என்பதை பார்ப்போமா?
Advertisment
1968-ம் ஆண்டு தேவன் இயக்கத்தில், வெளியான படம் நிமிர்ந்து நில். ரவிச்சந்திரன் பாரதி ஆகியோர் இணைந்து நடித்த இந்த படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். ஒன்றாக இருந்த மெல்லிசை மன்னர்கள் இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன் –டி.கே.ராமமூர்த்தி ஆகியோர் பிரிந்து இசையமைத்த காலக்கட்த்தில் வெளியாக இந்த படம் எம்.எஸ்.விக்கு பாராட்டக்களை பெற்று தந்தது.
காட்டு இலக்கா அதிகாரியாக வரும் ரவிச்சந்திரன் பாடுவது போல் அமைந்த இந்த பாடலை கவிஞர் வாலி எழுதியிருந்தார். கிராமத்து மக்கள் சென்றிராத கவிஞர் வாலி, முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் எழுதிய இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதேபோல், மதுரையில் நகரத்தில் பிறந்த டி.எம்.சௌந்திரராஜன், இந்த பாடலில் வரும் கிராமத்து வரிகளை அழகாக பாடியிருப்பார்.
கிராமத்திற்கு காட்டு இலாக்கா அதிகாரியாக வரும் ரவிச்சந்திரன் மாறு வேடத்தில் பாடுவது போல் வரும் ‘’ஒத்தையடி பாதையிலே’’ என்ற இந்த பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நகரத்து பின்னணி கொண்ட கவிஞர் வாலி கிராமத்து பின்னணியில் பாடல் எழுதுவாரா என்ற கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் வெளியான இந்த பாடல் ஒரு வித்தியாசமான பாடலாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“