இளையராஜா உள்ளத்தை தொட்ட வாலி பாடல்: ரஜினிகாந்த் படத்தில் ஹிட்
பல இசையமைப்பாளர்களின் இசையில் பல பாடல்களை எழுதியுள்ள வாலி, தளபதி படத்தில் தான் எழுதிய ஒரு பாடல் மூலம் இளையமைப்பாளர் இளையராஜாவை உள்ளம் நெகிழ வைத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் தனது வாழ்நாளின் கடைசி வரை வாலிப கவிஞர் என்று போற்றப்பட்டவர் தான் வாலி. எம.ஜி.ஆர் சிவாஜி தொடங்கி, ரஜினி கமல், விஜயகாந்த், சூர்யா சிம்பு வரை 5 தலைமுறை நடிகர்களுக்கு தனது வரிகள் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்த வாலி, கவியரசர் கண்ணதாசன் உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில் அவருக்கு போட்டியாக வந்தவர்.
Advertisment
இருவருக்கும் இடையில் போட்டி இருந்தாலும், தனிப்பட்ட முறையில் நெருங்கிய நண்பர்களாகவும் இருந்துள்ளனர்.அதேபோல் பல இசையமைப்பாளர்களின் இசையில் பல பாடல்களை எழுதியுள்ள வாலி, தளபதி படத்தில் தான் எழுதிய ஒரு பாடல் மூலம் இளையமைப்பாளர் இளையராஜாவை உள்ளம் நெகிழ வைத்துள்ளார்.
1991-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான படம் தளபதி. ரஜினிகாந்த் ஷோபனா, மம்முட்டி, பானுப்பிரியா, ஸ்ரீவித்யா, ஜெய்சங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இந்த படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
குறிப்பாக இந்த படத்தில் வரும் ‘’சின்னத்தாயவள் தந்த ராசாவே’’ என்ற பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற பாடலாக உள்ளது. இந்த பாடல் பதிவு மும்பையில் நடைபெற்றுள்ளது. ஆனால் இங்கு, இசையமைப்பாளர் எம்.எஸ்.வியுடன் வேறு வேலையாக இருந்த கவிஞர் வாலி மும்பை செல்ல முடியவில்லை.
இதன் காரணமாக தயாரிப்பு நிறுவனத்தை சேர்ந்த ஒருவர் வாலி பாடல் எழுதி கொடுக்க, தினமும், விமானம் மூலமாக மும்பை சென்று கொடுத்து அந்த பாடல் பதிவாகியுள்ளது. இதில் இளம் வயதில் குழந்தை பெற்றுக்கொள்ளும் ஸ்ரீவித்யா, அதை ஒரு கூட்ஸ் ட்ரெயினில் விட்டுவிடுவார் அப்போது தான் ‘’சின்னத்தாயவள் தந்த ராசாவே’’ என்ற பாடல் வரும்.
இந்த பாடலில் சின்னத்தாயி இசையமைப்பாளர் இளையராஜாவின் தாய் பெயர். அதேபோல் இதில் ராசாவே என்ற சொல் வருவது இளையராஜாவை குறிக்கும் என்பதால், இந்த பாடலை இசையமைப்பாளர் இளையராஜா மிகவும் விரும்பி தனது உள்ளம் தொட்டபாடல் என்று வாலியிடம் கூறியுள்ளார். ஒரு நேர்காணலில் வாலி இந்த தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“