திரைத்துறையில் டி.எம்.சௌந்திரராஜன் பாடகராக அறிமுகமான புதிதில் சரியான வாய்ப்புகள் இல்லாமல் இருந்துள்ளார். அப்போது சிவாஜி நடித்த ஒரு படத்திற்கு பாட வாய்ப்பு கிடைத்தபோதும் டி.எம்.எஸ். வேண்டாம் என்று சிவாஜி கூறியள்ளார்.
1954-ம் ஆண்டு ஆர்.எம்.கிருஷ்ணசாமி இயக்கத்தில் வெளியான படம் தூக்கு தூக்கி. சிவாஜி, லலிதா பத்மினி ஆகியோர் இணைந்து நடித்திருந்த இந்த படத்திற்கு, ஜி.ராமநாதன் இசையமைத்துள்ளார். இந்த 1950-ம் ஆண்டு வெளியான எம்.ஜி.ஆரின் மந்திரி குமாரி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தாலும், அந்த படத்தில் ஒரு பாடல் மட்டுமே பாடியிருந்த டி.எம்.சௌந்திரராஜனுக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இவருக்கு வாய்ப்பு கிடைக்காத மற்றொரு காரணம் என்னவென்றால், அப்போது முன்னணி நடிகர்களாக இருந்த எம்.ஜி.ஆருக்கு சீர்காழி கோவிந்தராஜனும், சிவாஜிக்கு சி.எஸ்.ஜெயராமனும் பாடிக்கொண்டிருந்தனர். இதன் காரணமாக ஓரிரு பாடல்கள் மட்டுமே டி.எம்.எஸ்க்க்கு கிடைத்துள்ளது. அதேபோல் எம்.ஜி.ஆர் சிவாஜி இருவரும் இணைந்து நடித்த ஒரே படமாக கூண்டுக்கிளி படததில் 4 பாடல்கள் பாடியிருந்தார்.
இதனிடையே தூக்கு தூக்கி படத்தில் சிவாஜிக்கு பாடுவதற்காக, திருச்சி லோகநாதன் என்பரை கேட்டுள்ளனர். ஆனால் அவர் சம்பளம் அதிகமாக கேட்டதால், அவரை விட்டு, அப்போது வளர்ந்து வரும் பாடகராக இருந்த டி.எம்.சௌந்திரராஜனை கேட்டுள்ளனர். ஆனால் எனக்கு சி.எஸ்.ஜெயராமன் பாடினால் தான் சரியாக இருக்கும் டி.எம்.எஸ்.வேண்டாம் என்று சிவாஜி கூறியுள்ளார். அதன்பிறகு கவிஞர் மருதகாசி சிவாஜியை சமாதானப்படுத்தி அந்த படத்தில் டி.எம்.எஸ்க்கு வாய்ப்பு வாங்கி கொடுத்துள்ளார்.
இந்த படத்தில் காதலியை சமாதானப்படுத்தும் வகையில் ஒரு பாடல் எழுத சொல்ல, மருதகாசி பாடலை எழுதியுள்ளார். ‘’கண்கணில் புகுந்து கருக்களில் கலந்த மின்னொளியே ஏன் மௌனம்’’ என்ற அந்த பாடலை எழுதிய மருதகாசி கடைசி வரிக்கு வார்த்தை கிடைக்காமல் தடுமாறியுள்ளார். மேலும் சரியான சொல் கிடைக்க வேண்டும் என்பதற்காக 3 நாட்கள் வரை காத்திருந்துள்ளார்.
அதன்பிறகும் சொல் கிடைக்காத நிலையில், அவரது குருவான உடுமலை நாராயணகவி, என்ன காசி என்னாச்சு என்று விசாரிக்கும்போது, இல்ல அய்யா ஒரு பாடல் எழுதினேன். அதற்கு கடைசி வரி சரியாக வரவில்லை என்று கூறியுள்ளார். அந்த பாடலை வாங்கி பார்த்த, நாராயணகவி கடைசி வரி தானே ‘’காண்போமே பாதி பாதி’’ என்று போடு என கூறியுள்ளார். அந்த வரிகள் கச்சிதமாக பொருந்தி பாடல் தயாராகியுள்ளது. இந்த பாடலை டி.எம்.எஸ். – எம்.எஸ் ராஜேஸ்வரி பாடியிருந்தனர்.
இந்த படத்தில் டி.எம்.எஸ்.ஒரு பாடல் பாட சிவாஜி ஒப்புக்கொள்ளாத நிலையில், 11 பாடல்களில் டி.எம்எஸ் 8 பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil