Advertisment

எம்.எஸ்.வி நடத்திய விழாவில் என்ட்ரிக்கு தயாரான ''சோ'': கடும் கோபமான எம்.ஜி.ஆர்; காரணம் என்ன?

எம்.எஸ்.வி நடத்திய ஒரு விழாவிற்கு சோ அழைக்கப்பட்டதால், எம்.ஜி.ஆர் கடுமையாக கோபப்பட்டுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
MSv Cho MGR

தமிழ் சினிமாவில் நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும், ஒரு விழாவிற்கு சோவை எதற்காக அழைத்தாய் என்று எம்.ஜி.ஆர் இசையமைப்பாளர் எம்.எஸ்.வியிடம் தகராறு செய்துள்ளார்.

Advertisment

தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனி இடம் பிடித்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை ஏற்படுத்திக்கொண்டவர் எம்.எம்.ஜி.ஆர். நாடக நடிகராக இருந்து சினிமாவில் துணை நடிகராக அறிமுகமான இவர், 10 வருட போராட்டத்திற்கு பிறகு ஹீரோவாக உயர்ந்து, பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். தொடக்கத்தில் தன்னுடன் இணநை்து நடிக்க தயங்கிய பலரையும் பின்னாளில் தன்னுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்று விரும்பக்கூடிய ஒரு நபராக மாறினார்.

அதேபோல் எழுத்தாளர், இயக்குனர், கதாசிரியர், நடிகர், பத்திரிக்கையாளர் அரசியல் விமர்சகர் என பன்முக திறமை கொண்டவர் சோ ராமசாமி. எம்.ஜி.ஆர் - சோ இருவரும் நெருங்கிய நண்பர்கள் தான் என்றாலும் கூட, அரசியல் என்று எடுத்துக்கொண்டால் இருவரும் எதிர் எதிர் துருவங்களாக இருந்துள்ளனர். அந்த காலக்கட்டத்தில், இசையமைப்பாளர் எம்.எஸ்.வி, தனது குருநாதர் எஸ்.எம்.சுப்பையா நாயுடுவுக்கு விழா நடத்த முடிவு செய்து எம்.ஜி.ஆர் சிவாஜி இருவரிடமும் டேட்ஸ் வாங்கி வைத்துள்ளார்.

அதேபோல், அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க, சோ.ராமசாமியை புக் செய்துள்ள எம்.எஸ்.வி, விவழாவிற்கான நோட்டீஸை அச்சடித்து, எம்.ஜி.ஆரிடம் காட்டுவதற்காக சென்றுள்ளார். அப்போது மைசூரில் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படத்தின் படப்பிடிப்பில் இருந்த எம்.ஜி.ஆரை சந்தித்த எம்.எஸ்.வி நோட்டீசை கொடுத்துள்ளார். அதை பார்த்த எம்.ஜி.ஆர், இந்த நிகழ்ச்சியில் சோ கலந்துகொள்கிறார் என்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்,

மேலும் இதை பார்த்தவுடன் கோபப்பட்ட எம்.ஜி.ஆர், இந்த விழாவிற்கு எதற்காக நீ சோவை அழைத்தாய், சோ எனக்கு நண்பர் தான். ஆனால் அரசியலில் இருவரும் எதிரெதிரே இருக்கிறோம். மேடையில் நான் அரசியல் பேசினால் அதற்கு நேர்மாறாக அவர் ஒன்று பேசுவார் இது மேடையில் நன்றாக இருக்குமா? உனக்கு ஹார்மோனிய பெட்டியை தவிர வேறு ஒன்றுமே தெரியாதுயா. நீ வெறும் சுக்கு. இதை கேட்ட எம்.எஸ்.வி சோவிடம் விழாவிற்கு வர வேண்டாம் என்று சொல்லிடவா என்று கேட்டுள்ளார்.

எம்.ஜி.ஆர், வேண்டாம் அப்படி எல்லாம் சொல்லிவிடாதே விழாவிற்கு சோ வரட்டும் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். அதன்பிறகு, எம்.ஜி.ஆர் இப்படி சொன்னதை சோவிடம் எம்.எஸ்.வி சொல்ல, கவலைப்படாதீங்க, இந்த விழா சுப்பையா நாயுடுவுக்கான விழாவாகத்தான் இருக்கும். இந்த விழாவில் அரசியல் கலக்காமல் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். அதன்படி அந்த விழா அமைதியாக நடைபெற்றுள்ளது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
M S Viswanathan Mgr Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment