தமிழ் சினிமாவில், பல நடிகர்களுக்கு தனது குரலின் மூலம் இனிமையான பாடல்களை கொடுத்துள்ள தெய்வீக பாடகர் டி.எம்.சௌந்திரராஜன், கண்ணதாசனுக்காக ஒரு பாடல் பாடியிருந்த நிலையில், இந்த பாடலை எதற்காக இப்படி பாடினீர்கள் என்று கண்ணதாசன் டி.எம்.எஸிடம் கோபப்பட்டுள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
1963-ம் ஆண்டு சிவாஜி கணேசன் சாவித்ரி ஜோடியாக நடித்து வெளியான படம் ரத்த திலகம். இந்தியா – சீனா போரை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருந்த இந்த படத்தை தாதா மைரசி இயக்கியிருந்தார். கண்ணதாசன் கதையில் வெளியான இந்த படத்தை பஞ்சு அருணாச்சலம் தயாரித்திருந்த நிலையில், கே.வி மகாதேவன் இசையமைத்திருந்தார்.
இந்த படத்தில் 8 பாடல்கள் இடம்பெற்றிருந்தது. அனைத்து பாடல்களையுளும் கண்ணதாசனே எழுதியிருந்த நிலையில், 5 பாடல்களை டி.எம்.செளந்திரராஜன் பாடியிருந்தார். சினிமாவில், கவிஞர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசியரியர், இயக்குனர் என பன்முக திறமை கொண்ட கண்ணதாசன் அனைத்து துறைகளிலும் வெற்றியை பெற்றுள்ள நிலையில், சினிமாவில் பாடகாகவும் வாய் அசைத்து நடித்துள்ளார்.
அந்த வகையில் ரத்த திலகம் படத்தில் கல்லூரி ஆண்டு விழாவில் முன்னாள் மாணவர் முத்தையா பாடல் பாடுவார் என்று சொன்னவுடன், கண்ணதாசன் கோட் சூட் போட்டுக்கொண்டு அழக்காக பாடலுக்கு வாய் அசைத்திருப்பார். அந்த பாடல் தான் ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு என்ற பாடல். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், கண்ணதாசன் தோற்றிய அந்த பாடலும் ஹிட் அடித்தது.
பாடல் ஹிட் அடித்தாலும், பாடலை உண்மையாக பாடிய டி.எம்.எஸ் மீது கண்ணதாசன் கோபமடைந்துள்ளார். ரத்த திலகம் படம் வெளியான பிறகு கண்ணதாசன் எந்த அரசியல் மேடைக்கு சென்றாலும், நீங்கள் பாடிய அந்த பாடலை பாடுங்கள் என்று பலரும் கேட்டுள்ளனர். இதை கேட்ட கண்ணதாசன் அந்த பாடலை நான் பாடவில்லை. டி.எம்.சௌந்திரராஜன் தான் பாடினார். நான் வாய் மட்டும் தான் அசைத்தேன் என்று கூறியுள்ளார்.
ஒரு இடமாக இருந்தாலும் பரவாயில்லை. செல்லும் இடமெல்லாம் இதேபோல் கேட்க, கண்ணதாசனும் சளைக்காமல் விளக்கம் அளித்துள்ளார். அதன்பிறகு ஒரு நாள் டி.எம்.எஸை சந்தித்த கண்ணதாசன், அய்யா டி.எம்.எஸ் எம்.ஜி.ஆருக்கு அவர் மாதிரியே பாடிட்டீங்க, சிவாஜிக்கும் அவர் மாதிரியே பாடிட்டீங்க. அதே மாதிரி எனக்கும் என்னை மாதிரியே பாடிட்டீங்களே! ஏன் இப்படி பாடுனீங்க என்று செல்லமாக கோபப்பட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“