கண்ணதாசன் வரிகளை பாடத் தயங்கிய டி.எம்.எஸ்; உடனே மாற்றிக் கொடுத்த கவிஞர்: எவ்வளவு பெருந்தன்மை?
கடந்த 1963-ம் ஆண்டு கண்ணதாசன் தயாரிப்பில் வெளியான திரைப்படம் வாணம்பாடி. எஸ்.எஸ்.ராஜேந்திரன், தேவிகா, முத்துராமன், டி.ஆர்.ராஜகுமாரி உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்திற்கு, கே.வி.மகாதேவன் இசையமைத்திருந்தார்.
கடவுள் குறித்து கண்ணதாசன் எழுதிய ஒரு பாடலை டி.எம்.சௌந்திரராஜன் பாடாமல் யோசித்துக்கொண்டிருந்ததை பர்த்த கண்ணதாசன், அவருக்காக அந்த வரிகளை மாற்றி கொடுத்துள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
Advertisment
கடந்த 1963-ம் ஆண்டு கண்ணதாசன் தயாரிப்பில் வெளியான திரைப்படம் வாணம்பாடி. எஸ்.எஸ்.ராஜேந்திரன், தேவிகா, முத்துராமன், டி.ஆர்.ராஜகுமாரி உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்திற்கு, கே.வி.மகாதேவன் இசையமைத்திருந்த நிலையில், அனைத்து பாடல்களையும் கவியரசர் கண்ணதாசனே எழுதியிருந்தார். ஜி.ஆர்,நாதன் இயக்கிய இந்த படத்தை கண்ணதாசன் புரோடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த படத்தில் வரும் அனைத்து பாடல்களையும் கண்ணதாசனே எழுதியுள்ளார். அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் இன்றும் பேசப்படும் பாடல்களாக அமைந்துள்ளது, இதில் ‘’கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும்’’ என்ற பாடல் பெரிய ஹிட் பாடலாக இன்றும் பலரின் விருப்பமாக பாடலாக உள்ளது. டி.எம்.சௌந்திரராஜன் இந்த பாடலை பாடியிருந்தார்.
இந்த பாடலை பதிவு செய்யும்போது, டி.எம்.சௌந்திரராஜன் பாடாமல் அப்படியே நின்றுள்ளார். இதை கவனித்த கண்ணதாசன் என்ன ஆச்சு என்று கேட்க, இவன் காதலித்து செத்துபோய்டுவான்... ஆனால் கடவுள் எப்படி சாக முடியும். மனிதன் தான் சாக முடியும் என்று சொல்ல, உடனடியாக அருகில் பேனாவை வாங்கிய கண்ணதாசன், கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும், அவன் காதலித்து வேதனையில் வாட வேண்டும் என்று மாற்றி கொடுத்துள்ளார்.
இந்த பாடல் முதலில், கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும், அவன் காதலித்து வேதனையில் சாக வேண்டும் என்று கண்ணதாசன் எழுதியுள்ளார். பாடல் பதிவின்போது டி.எம்.எஸ் இந்த பாடலை பாட தயங்கியதால், அங்கேயே பாடல் வரிகளை கண்ணதாசன் மாற்றி கொடுத்து இப்போது பாடுங்கள் என்று கூறியுள்ளார். இந்த பாடல் காலத்தால் அழியாத ஒரு ஹிட் பாடல் என்று சொல்லலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“