பாரதியார் பாட்டுக்கு இசை... டி.எம்.எஸ் சொன்ன அந்த வார்த்தை : எம்.எஸ்.வி என்ன செய்தார்?
எம்.எஸ்.வி-யின் குருவான சி.ஆர்.சுப்புராமன், திடீரென மரணமடைந்துவிட்டதால், அவர் இசையமைக்க வேண்டிய படங்களுக்கு எம்.எஸ்.வி - ராமமூர்த்தி இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் மெல்லிசை மன்னர்கள் என்று பெயரேடுத்தவர் இருவர் எம்.எஸ்.விஸ்வநாதன் – டி.கே.ராமமூர்த்தி. இவர்கள் இருவரும் இணைந்து க்ளாசிக் தமிழ் சினிமாவில் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளனர். எம்.எஸ்.வி-யின் குருவான சி.ஆர்.சுப்புராமன், திடீரென மரணமடைந்துவிட்டதால், அவர் இசையமைக்க வேண்டிய படங்கள் பாதியில் நின்று போனது.
Advertisment
அந்த படங்களின் தயாரிபாளர்கள் இணைந்து எம்.எஸ்.வியிடம் நீங்கள் தான் இந்த படங்களை முடித்து தர வேண்டும் என்று சொல்ல, நான் மட்டும் முடியாது, ராமமூர்த்தியுடன் இணைந்து படங்களை முடித்து தருகிறேன் என்று கூறிய எம்.எஸ்.விஸ்வநாதன், அதன்படி சி.ஆர்.சுப்புராமன் விட்டுச்சென்ற படங்கள் அனைத்திற்கும் இருவரும் இணைந்து இசையமைத்து முடித்தனர்.
அந்த படங்கள் முடிந்த பின்னரும், அடுத்து கமிட் ஆகும் படங்களுக்கும்இருவரும் இணைந்து இசையமைக்க தொடங்கி பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளர். ஒரு கட்டத்தில் இருவரும் பிரிந்த நிலையில், எம்.எஸ்.வி, எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைக்க தொடங்கினார். அதேபோல் டி.கே.ராமமூர்த்தியும் பல படங்களுக்கு இசையமைத்திருந்தார். ஆனால் எம்.எஸ்.வி அளவுக்கு அவர் பெயர் பெறவில்லை.
தனது இசையின் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ள எம்.எஸ்.வி, மெட்டுக்கும் பாடல் கேட்பதோடு மட்டுமல்லாமல், பாடலை வாங்கிவிட்டு, அதற்கு தகுந்தாற்போல் மெட்டும் அமைத்துள்ளார். அந்த வகையில், பாரதியார், பாரதிதாசன் ஆகியோரின் பாடல்களுக்கு தனது இசையால் மாற்றம் கொடுத்தவர் தான் எம்.எஸ்.வி. குறிப்பாக கைகொடுத்த தெய்வம் படத்தில் இடம் பெற்ற ‘’சிந்து நதியின் இசை’’ என்ற பாடல் இன்றும் ஒரு சிறந்த பாடலாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த படத்தின் இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், இந்த பாடல் பாரதியார் எழுதிக்கொண்டே பாடினால் எப்படி இருக்கும் அந்த மாதிரி டியூன் அமைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அப்படி அவர் கேட்டபோது, உடனாடியாக எம்.எஸ்.வி தனது ஸ்டைலில் அதை பாடிக்காட்ட, இதுதான் டியூன் என்று கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் தேர்வு செய்துள்ளார். அதன்பிறகு இசையமைக்கப்பட்டு டி.எம்.சௌந்திரராஜன் இந்த பாடலை பாடியுள்ளார்.
இன்றைய ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த பாடலை தனக்கே உரிய ஸ்டைலில் பாடிய டி.எம்.சௌந்திரராஜன், இந்த பாட்டுக்கு எம்.எஸ்.வி இசையமைத்தது போல் தெரியவில்லை. பாரதியாரே இசையமைத்தது போலத்தான் இருக்கிறது என்று கூறியுள்ளார். அந்த அளவிற்கு எம்.எஸ்.வி இந்த பாடலில் தனக்கே உரிய தனித்துவத்தை புகுத்தியிருப்பார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“