80-களில் பாடகர் டி.எம்.சௌந்திரராஜன் சகாப்தம் முடியும் தருணத்தில் அவர் பாடிய ஒரு கிண்டலான பாடல், தற்போது கடுமையாக விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், பலரும் பாடலை எழுதிய வாலி, மற்றும் பாடிய டி.எம்.எஸ். ஆகியோருக்கு சாபம் கொடுத்து வருகின்றனர்.
Advertisment
தமிழ் சினிமாவில் மனித உணர்ச்சிகள் அனைத்திற்கும் தனது பாடல்கள் மூலம் உயிர் கொடுத்தவர் கண்ணதாசன். பாசமலர் படத்தில் அவர் எழுதிய வாராயன் தோழி வாராயோ என்ற பாடல் தான் இன்றுவரை திருமண வீடுகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. இந்த பாடல் திருமணமாகி கணவர் வீட்டுக்கு வரும் மணப்பெண்ணை வாழ்த்துவது போல் அமைந்திருக்கும். இந்த பாடலுக்கு நிகராக மற்றொரு பாடல் இதுவரை வரைவில்லை.
இந்த ‘’வாராயன் தோழி வாராயோ’’ பாடலுக்கு இணையாக அதே டியூனில் எழுதப்பட்ட ஒரு பாடல் தான் ‘’வாராயன் தோழா வாராயோ’’ பாடல். 1987-ம் ஆண்டு வெளியான ஆண்களை நம்பாதே படத்தில் இந்த பாடல் இடம் பெற்றிருக்கும். ஆண்பாவம் படத்தில் நடித்த வி.கே.ராமசாமி, கொல்லங்குடி கருப்பாயி, நடிகர் பாண்டியன் ஆகியோர் இணைந்து நடித்த இந்த படத்தில் திருமணம் செய்துகொள்ளப்போகும் நாயகனை கிண்டல் செய்வது போல் இந்த பாடலை கவிஞர் வாலி எழுதியிருந்தார்.
பாடலை டி.எம்.சௌந்திரராஜன் கிண்டல் செய்யும் பாணியிலேயே பாடியிருப்பார். திருமண வீடுகளில் மாப்பிள்ளை அழைப்பின்போது இந்த பாடல் இப்போதும் ஒலித்துக்கொண்டு இருக்கிறது. இந்த பாடல் பதிவான காலக்கட்டத்தில், சமூகவலைதளங்களின் பயன்பாடு அதிகமாக இல்லாததால் பாடல் பலருக்கு பாடல் பிடித்தமானதாக இருந்தது. இப்ப்போது சமூகவலைதளங்கள் பயன்பாடு அதிகரித்துவிட்ட நிலையில், இந்த பாடலை முருகன் பாடலாக நெட்டிசன்கள் மாற்றியுள்ளனர்.
Advertisment
Advertisements
இந்த பாடலில் முதலில் வரும் ‘’வாராயன் தோழா வாராயோ’’ என்ற வரிகளை எடுத்துவிட்டு வோறொரு பாடலில் வரும் வேதம் ஓதும் வரிகளை வைத்து அதன்பிறகு, ‘’இளம் மீசை கொண்ட குமரா, 8 முழம் வேட்டி கட்டும் அழகா’’ என்ற வரியில் இருந்து இந்த பாடல் தொடங்கும் வகையில் அமைத்து, கிண்டல் செய்து எழுதிய பாடலை, முருகனுக்கு எழுதிய பாடலாக மாற்றியுள்ளனர் நெட்டிசன்கள். இந்த பாடலை பார்த்த பலரும் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், ஒருசிலர், இந்த பாடலை எழுதியவர் பாடியவர், இசையமைத்தவர் நாசமாய் போவார்கள் என்று கூறியுள்ளதாக ஆலங்குடி வெள்ளைச்சாமி தனது வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், இந்த பாடலை எழுதிய வாலி, மற்றும் பாடலை பாடிய டி.எம்.சௌந்திரராஜன் ஆகிய இருவருமே முருகனின் தீவிர பக்தர்கள். அப்படி இருக்கும்போது இவர்கள் இப்படி ஒரு பாடலை முருகனுக்காக எழுதியிருப்பார்களா என்பதை யாரும் யோசிப்பதில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“