தமிழ் சினிமாவில் தனது ஆளுமையின் மூலம் உச்சத்தை தொட்ட எம்.ஜி.ஆர் தான் இயக்கி நடித்த உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் நடிகை லதாவை அறிமுகம் செய்து வைத்தார். ஆனால் இந்த படத்தில் லதா எம்.ஜி.ஆருடன் இணைந்து நடிக்க தயங்கியுள்ளார்.
எம்.ஜி.ஆர் முதன் முதலில் இயக்கி தயாரித்து நடித்த படம் நாடோடி மன்னன். இந்த படத்திற்கு பல தடைகள் வந்திருந்தாலும், படத்தின் பாதியில் நடிகை பானுமதி விலகியிருந்தாலும், அதை பற்றி கவலைப்படமாமல் படத்தை இயக்கிய முடித்தார். நாடோடி மன்னன் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
எம்.ஜி.ஆருக்கு பெரிய லாபத்தை எடுத்து கொடுத்தது. அதன்பிறகு பல படங்களில் நடித்த எம்.ஜி.ஆர் மீண்டும் தயாரிப்பு இயக்கம் நடிப்பு என்று இறங்கிய படம் உலகம் சுற்றும் வாலிபன். முதல்முறையாக வெளிநாடுகளில் படமாக்கப்பட்ட இந்த படம் எம்.ஜி.ஆருக்கு மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவுக்கும் புதுமையாக அமைந்தது. மேலும் எம்.ஜி.ஆர் நடிப்பில் விளம்பரம் இல்லாமல் வெளியாகி பெரிய வெற்றியை கொடுத்த படம் உலகம் சுற்றும் வாலிபன்.
இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை லதா அடுத்து எம்.ஜி.ஆருடன் தொடர் வெற்றிப்படங்களை கொடுத்தார். ஆனால் முதல் படமான உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் நடிக்கும்போது எம்.ஜி.ஆருடன் இணைந்து நடிக்க நடிகை லதா தயங்கியுள்ளார். இதை பார்த்த எம்.ஜி.ஆர், ஏன் உங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்டுள்ளார். உங்களுடன் இணைந்து நடிக்க எனக்கு தயக்கமாக இருக்கிறது என்று லதா கூறியுள்ளார்.
அதற்கு எம்.ஜி.ஆர் ஏன் என்று கேட்க, நீங்கள் ஒரு முன்னணி நடிகர், சூப்பர் ஸ்டார், நான் அறிமுக நடிகை அதுதான் தயக்கம் என்று சொல்ல, எல்லாம் தயாராகி படப்பிடிப்புக்கு வந்தபோது, இப்படி சொல்கிறாரே என்று எம்.ஜி.ஆர் கோபமானாலும், பிறகு லதாவின் நிலையை புரிந்துகொண்டு, அவரிடம் போய், வேண்டுமென்றால் இந்த படத்தின் ஹீரோவை மாற்றிவிலடாமா என்று கேட்டுள்ளார். இதை கேட்ட லதா வாய்விட்டு சிரித்துள்ளார்.
இதன்பிறகு படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், எம்.ஜி.ஆரின் வழிகாட்டுதலின் படி லதா அந்த படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்த நிலையில், எம்.ஜி.ஆர் இயக்குனராக தனது திறமையை மீண்டும் ஒருமுறை நிரூபித்த படமாக அமைந்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“