தமிழ் சினிமாவில் தனது வாழ்நாளில் இறுதிவரை வாலிப கவிஞர் என்று பெயரேடுத்த கவிஞர் வாலி, சில படங்களில் நடித்துள்ள நிலையில், இவரின் நடிப்பை டிவியில் பார்த்த சிவாஜி கணேசன், நேரில் அழைத்து பாராட்டியுள்ளார் என்றாலும் அவரது நடிப்பை பார்த்து கண் கலங்கியுள்ளார்.
தமிழ் சினிமாவில் வாலிப கவிஞர் என்று போற்றப்படுபவர் வாலி. எம்.ஜி.ஆர் சிவாஜி தொடங்கி, ரஜினி கமல், விக்ரம் சூர்யா, சிம்பு, தனுஷ் உள்ளிட்ட இன்றைய நடிகர்களுக்கும் தனது எழுத்தின் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்த வாலி, கண்ணதாசன் எம்.ஜி.ஆரை விட்டு பிரிந்தபோது எம்.ஜி.ஆரின் அஸ்தான பாடல் ஆசிரியராக மாறியவர்.
அதே போல் எம்.ஜி.ஆர் சிவாஜி தொடங்கி ரஜினி கமல் காலம் முதல் இன்றைய இளம் நடிகர்கள் வரை சுமார் 5 தலைமுறைகளுக்கு மேலாக பாடல்கள் எழுதியுள்ள வாலி, தன் வாழ்நாளில் இறுதிவரை திரைப்படங்களில் பாடல் எழுதியுள்ளார். அதேபோல் தனது முதுமை வயதிலும் இளம் நடிகர்களுக்கான காதல் பாடல்களை கொடுப்பதில் வல்லவராக திகழ்ந்த வாலி சில படங்களிலும் சீரியல்களிலும் நடித்துள்ளார்
கே.பாலச்சந்தர் இயக்கத்தில் பொய்க்கால் குதிரை என்ற படத்தில் நடிகராக அறிமுகமாக வாலி, அதன்பிறகு கமல்ஹாசன் இயக்கத்தில் ஹேராம், காதல் வைரஸ் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். அதேபோல் கே.பாலச்சந்தர் இயக்கிய கையளவு மனசு என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாக வாலி, அந்த சீரியலில் ஒரு மகனுக்கு அப்பாவாக நடித்திருந்தார். கதையில் அவரது மகன் இறந்துவிடுவார்.
மகன் இறந்தது மனைவிக்கு தெரியவரும்போது அவர் துக்கம் தாங்காமல் அழ வேண்டும். இந்த காட்சியில் முதலில் வாலி நடிக்க தயங்கினாலும், கே.பாலச்சந்தரின் அறிவுரையை கேட்டு நடித்துள்ளார். இந்த சீரியல் முதலில் சன்டிவியில் ஒளிபரப்பாகி பிறகு ராஜ் டிவியில் ஒளிபரப்பாகியுள்ளது. இதனை பார்த்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன், என்ன இவன் இவ்வளவு சூப்பரா நடிக்கிறனே என்று வாலிக்கு போன் செய்துள்ளார்.
வாலி போனை எடுத்தவுடன், என்னய்யா நீ இப்படி நடிக்கிற, நீ அழுவதை பார்த்து எனக்கு அழுகை வருதுய்யா என்று கூறியுள்ளார். இந்த தகவலை வாலி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“