5 தலைமுறை நடிகர்களுக்கு தனது பாடல்கள் மூலம் ஹிட் கொடுத்த கவிஞர் வாலி, ஒரு டியூனுக்கு பாடல் எழுத அந்த பாடல் தனக்கு பிடிக்கவில்லை என்பதால், இசையமைப்பாளர் அதே டியூனுக்கு வேறொரு கவிஞரை வைத்து எழுதிய பாடல் பெரிய ஹிட் அடித்து இன்றும் போற்றப்படும் ஒரு பாடலாக இருக்கிறது என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
Advertisment
1980-ம் ஆண்டு, என்.எஸ்.ராஜேந்திரன் இயக்கத்தில் வெளியான படம் எங்க ஊரு ராசாத்தி. ராதிகா சுதாகர் இணைந்து நடித்திருந்த இந்த படத்திற்கு கங்கை அமரன் இசையைமத்திருந்தார். ராதிகா – சுதாகர் இருவரும் காதலிக்கும்போது, தவிர்க்க முடியாத காரணத்திற்காக, சுதாகர் வெளியூர் சென்றுவிடுவார். அந்த நேரத்தில், ராதிகாவுக்கு வோறொருவருடன் திருமணம் முடிந்துவிடும். மீண்டும் சுதாகர் ஊர் திரும்பும்போது ராதிகாவுக்கும் திருமணம் ஆனதை நினைத்து அதிர்ச்சியடைவார்.
அதன்பிறகு ராதிகாவை நினைத்து பாடும் ஒரு பாடல் தான் ‘’பொன்மானை தேடி நானும் பூவோடு வந்தேன்’’ என்ற பாடல். இந்த பாடல் இன்றைய காலக்கட்ட ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்த டியூனுக்கு முதலில் பாடல் எழுதியவர் கவிஞர் வாலி தான். இந்த படத்தில், ஆசைப்பட்டு பார்த்த ஒரு அழகான பொண்ணு, சிறுக்கி ஒருத்தி ஆகிய 2 பாடல்களை எழுதியிருந்த வாலி, 3-வதாக இந்த பாடலையும் எழுதியிருந்தார்.
இந்த பாடலை கேட்ட கதாசிரியர் கலைமணிக்கு பிடிக்காத நிலையில், கவிஞர் முத்துலிங்கத்தை அழைத்து, இந்த பாடல் எனக்கு பிடிக்கவில்லை. இந்த டியூனுக்கு நீங்கள் ஒரு பாடல் எழுதுங்கள் என்று கூறியுள்ளார். இந்த பாடல் பிடிக்கவில்லை என்று நீங்கள் வாலியிடமே சொல்லியிருக்கலாமே என்று கேட்க, அவர் நீங்கள் கொடுக்கும் காசுக்கு இது போதும்யா என்று சொல்லிவிடுவார் அதனால் நீங்கள் எழுதுங்கள். நன்றாக இருந்தால் வைத்துக்கொள்வோம் இல்லை என்றால் வாலி பாடலை வைத்துக்கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.
அதன்பிறகு இந்த பாடலை கவிஞர் முத்துலிங்கம் எழுதியுள்ளார். அவர் எழுதிய பாடல் தான் ‘’பொன்மானை தேடி நானும் பூவோடு வந்தேன்’’ என்ற பாடல். இன்றைய ரசிகர்கள் மத்தியிலும் இந்த பாடல் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், காலம் கடந்து நிலைத்திருக்கிறது. இந்த தகவலை கவிஞர் முத்துலிங்கம் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.