தமிழ் சினிமாவில் 5 தலைமுறை நடிகர்களுக்கு தனது பாடல்கள் மூலம் ஹிட் கொடுத்துள்ள கவிஞர் வாலி, தனது பாடலில் கண்ணதாசனுக்கு புகழ் சேர்த்தை விரும்பாத இளையராஜா அந்த வரிகளை மாற்றுமாறு கூறியுள்ளார். ஆனால் சிலரின் அனுமதியால் அந்த வரிகள் மாறாமல் இடம் பெற்றுள்ளது. அது எந்த பாடல் தெரியுமா?
Advertisment
தமிழ் சினிமாவில், கவியரசர் என்ற அடையாளத்துடன் வலம் வந்தவர் கண்ணதாசன். பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ள இவர், சிவாஜி, எம்.ஜி.ஆர் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு தனது வரிகள் மூலம் ஹிட் கொடுத்தவர். மேலும் மனித உணர்ச்சிகளின் வெளிப்பாடாக அமைந்த இவரது பாடல்கள் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதே சமயம் கண்ணதாசனுக்கு போட்டியாக பாடல் எழுத வந்தவர் தான் கவிஞர் வாலி.
கண்ணதாசன் – வாலி இடையே கடுமையான போட்டி இருந்தாலும், இருவருக்கும் இடையே தனிப்பட்ட முறையில் நெருங்கிய நட்பு இருந்துள்ளது. ஒரு கட்டத்தில், வாலியை தனது வாரிசாகவே அறிவித்திருந்தார் கண்ணதாசன். அதேபோல் கண்ணதாசன் அரசவை கவிஞராக எம்.ஜி.ஆர் அறிவித்தபோது, முதல் ஆளாக அதற்கு மகிழ்ச்சி தெரிவித்து எம்.ஜி.ஆர் முடிவுக்கு மகிழ்ச்சியில் ஆழ்ந்தவர் தான் கவிஞர் வாலி. இப்படி இவர்களுக்கு இடையே நெருக்கமான நட்பு இருந்துள்ளர். கவிஞர் வாலி தனக்கு வாய்ப்பு கிடைக்கும்போது கண்ணதாசனை தனது பாடல்களில் புகழ்ந்துள்ளார்.
அந்த வகையில், கடந்த 1983-ம் ஆண்டு பிரபு நடிப்பில் வெளியான படம் சூரக்கோட்டை சிங்கக்குட்டி. பிரபு சில்க் சுமிதா இணைந்து நடித்த இந்த படத்தை ராமநாராயணன் இயக்கியிருந்தார். ஏ.வி.எம்.நிறுவனம் இந்த படத்தை பிரம்மாண்டமாக தயாரித்திருந்த நிலையில், இளையராஜா இசையமைக்க அனைத்து பாடல்களையும் கவிஞர் வாலி எழுதியுள்ளார்.
இதில் ஒரு பாடலில், காளிதாசன், கண்ணதாசன் என்று எழுதியிருப்பார் கவிஞர் வாலி. இந்த பாடலை பார்த்த இளையராஜா அது ஏன் ஒரு நபரின் பெயரை குறிப்பிடும்படி ஒரு பாடல் இது வேண்டாம் என்று இளையராஜா கூறியுள்ளார். ஆனால் பாடலை பார்த்த இயக்குனர் ராமநாராயணன், ஏ.வி.எம்.குமரன் ஆகிய இருவரும், கண்ணதாசனுக்கு எதிராக வந்த இவரே அவரை பாடலில் புகழும்போது நமக்கு என்ன இந்த பாடலையே வைத்துக்கொள்ளலாம் என்று கூறியுள்ளனர். அப்படி வந்த இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“