கண்ணதாசன் எழுதிய ஒரு பாடல் தான் தனது மனதை மாற்றியது என்று கூறியுள்ள கவிஞர் வாலி, இந்த பாடலுக்கான விளக்கத்தை அவரது மகனாக அண்ணாதுரை கண்ணதாசனுக்கு வாலி கூறியுள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
தமிழ் சினிமாவில், 5 தலைமுறை நடிகர்களுக்கு பாடல் எழுதிய பெருமைக்கு சொந்தக்காரரான வாலி, ஆரம்பத்தில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரானாரின் பாடலை கேட்டு தான் சினிமாவில் பாடல் எழுத வாய்ப்பு தேடி அலைந்துள்ளார். அந்த காலக்கட்டத்தில் பல இசையமைப்பாளர்களை சந்தித்த வாலி பாடல் எழுத வாய்ப்பு கேட்டபோதும், அவருக்கு சென்ற இடமெல்லாம் தோல்வியே கிடைத்துள்ளது.
இதன் காரணமாக ஒரு கட்டத்தில் சினிமாவே வேண்டாம் என்று முடிவு செய்து சென்னையில் இருந்து மதுரைக்கு புறப்பட தயாராகியுள்ளார் வாலி. அப்போது அவரது நெருங்கிய நண்பரும் பாடகருமான பி.பி.ஸ்ரீனிவாஸ் வந்துள்ளார். அவரிடம் சமீபத்தில் என்ன பாடல் பாடினீர்கள் அதை கொஞ்சம் பாடுங்கள் என்று வாலி கேட்க, கண்ணதாசன் எழுதிய ‘’மயக்கமா கலக்கமா’’ என்ற பாடலை தான் பாடினேன் என்று அந்த பாடலை பாடி காட்டியுள்ளார் பி.பி.ஸ்ரீனிவாஸ்.
இந்த பாடலை கேட்ட வாலி, மதுரை செய்யும் முடிவை கைவிட்டு மீண்டும் சினிமா வாய்ப்பு தேடியுள்ளார். அதன்பிறகு ஒரு சில படங்களில் பாடல்கள் எழுதிய வாலிக்கு கற்பகம் படம் பெரிய வெற்றியை கொடுத்தது. தொடர்ந்து எம்.ஜி.ஆருக்கு பல ஹிட் பாடல்களை கொடுத்த வாலி, கண்ணதாசனுடன் நெருக்கமான நட்புடன் இருந்துள்ளார். இறுதியில் கண்ணதாசன் மணமடைந்தபோது அவருக்காக இரங்கல் கவிதை வாசித்தது கவிஞர் வாலிதான்.
கண்ணதாசன் பாடல் மூலம் தான் சினிமாவில் பாடல் எழுத மீண்டும் முயற்சித்ததாக பல மேடைகளில் கூறியுள்ள கவிஞர் வாலி, கண்ணதாசனின் மகன் அண்ணாதுரை கண்ணதாசன் இயக்கிய முதல் படத்தில் பாடல் எழுத சென்றுள்ளார். அப்போது வாலி, அண்ணாதுரையை பார்த்து உங்க அப்பா காலத்தில் இருந்த மாதிரி இல்லைடா இப்போ எல்லாம் மாறிப்போச்சு என்று கூறி சம்பளம் குறித்து பேசுவாரம்.
அப்போது தான் நான் சினிமாவில் இருப்பதற்கு காரணமே உங்க அப்பா எழுதிய பாடல் தான் என்று கூறி, அந்த மயக்கமா கலக்கமா பாடலுக்கு எனன் விளக்கம் ன்று எடுத்து கூறியுள்ளார். இதை கேட்ட அண்ணாதுரை கண்ணதாசன் என் அப்பா எழுதிய பாடலுக்கு இவ்வளவு தெளிவான விளக்கத்தை யாரும் கொடுத்ததில்லை என்று ஆச்சரியமாக பார்த்தாக அண்ணாதுரை கண்ணதாசன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.